Tork Motors-ன் மெகா திட்டம்.. புனேவில் முதல் அனுபவ மையம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புனேவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றது.

 

டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான கபில் ஷேக், தொடர்ந்து தனது மின்சார வாகனங்களை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய விரும்பவில்லை.

வாடிக்கையாளர்கள் அதனை தொட்டு பார்த்து அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு வாங்க வேண்டும் என நான் நினைக்கிறேன். வாடிக்கையாளர்கள் நிறுவனத்துடன் விவாதிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கும் திருப்தி ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

டாடா மோட்டார்ஸ் Vs மாருதி சுசூகி Vs எம்&எம்.. விழாக்கால பருவத்தில் எந்த பங்கினை வாங்கலாம்? டாடா மோட்டார்ஸ் Vs மாருதி சுசூகி Vs எம்&எம்.. விழாக்கால பருவத்தில் எந்த பங்கினை வாங்கலாம்?

ஆஃப்லைனிலும் விற்பனை

ஆஃப்லைனிலும் விற்பனை

இதுவரையில் ஆன்லைனில் புக்கிங் செய்து விற்பனை செய்து வந்த மின்சார மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர், வாடிக்கையாளர்களின் இடத்திற்கே சென்று டெலிவரி செய்து வந்தது. தற்போது வளர்ச்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆஃப் லைனில் வாடிக்கையாளர்களின் அனுபவத்தினை மேம்படுத்த, முதல் அனுபவ மையத்தினை புனேவில் டார்க் மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது.

புனேவில் விற்பனை

புனேவில் விற்பனை

பாரத் போர்ஜின் துணை நிறுவனமான இது ஜூலை 2022ல் தங்கள் மின்சார வாகனங்களை D2C என்றவாறு ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்தது. இந்த ஆன்லைன் விற்பனை மூலம் புனேவில் 250 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

இந்த நிலையில் தான் இதுவரையில் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்து வந்த நிறுவனம், தற்போது ஆப் லைனிலும் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தொட்டு பார்க்கணும்
 

வாடிக்கையாளர்கள் தொட்டு பார்க்கணும்

வாடிக்கையாளர்கள் வாகனங்களை தொட்டு பார்த்து உணர வேண்டும். டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களின் அனுபவங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் கருத்துகளை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஷோரூம் அவசியம். ஆக இது அவசியமான ஒன்று என்றும் தெரிவித்துள்ளது.

பிசிகல் ஸ்டோர் அவசியம்

பிசிகல் ஸ்டோர் அவசியம்

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் வெற்றிகரமாக ஆன்லைனில் தனது வணிகத்தினை செய்து வந்தாலும், சந்தைக்கும் நிறுவனத்திற்கும் இடையில் ஏதோ ஒரு இடைவெளி இருக்கிறது.. ஆக ஆர் டி ஓ உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய, வாடிக்கையாளர்களுக்கு பிசிகல் ஸ்டோர் என்பது அவசியமான ஒன்று. இது வாடிக்கையாளர்களின் அனுபவத்தினை மேம்படுத்தும்.

அனுபவ மையங்கள்

அனுபவ மையங்கள்

ஆன்லைன் விற்பனை என்பது பல வழிகளிலும் சரியான ஆப்சன் என்றாலும், இங்கு பலவிதமான உணர்வுகள் உள்ளன. இதற்கிடையில் தான் நிறுவனம் அதற்கு சொந்தமாக புனே மற்றும் பிம்ப்ரி சின்ஸ்வாட் உள்ளிட்ட இடங்களில் அனுபவ மையங்களை தொடங்கியுள்ளது.

இனி அதிகரிக்க திட்டம்

இனி அதிகரிக்க திட்டம்

புனேவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ரத்தன் டாடா மற்றும் ஓலாவின் இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் ஆதரவுடன் மும்பை, பெங்களூரு, ஹைத்ராபாத் மற்றும் டெல்லி உள்ளிட்ட 7 நகரங்களுக்கு எடுத்து செல்லும் என தெரிவித்துள்ளது. 2023ம் நிதியாண்டின் இறுதியில் 180 ஸ்டோர்களை வைத்திருக்கும் என்றும், அதன் பிறகு 400 ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

 உற்பத்தியும் விரிவாக்கமும்

உற்பத்தியும் விரிவாக்கமும்

தற்போது நிறுவனம் 5000 சதுர அடி அளவிலான அனுபவ மையத்தினையும், மற்றொன்று 600 சதுர அடியிலும் தொடங்கப்படும். டீலர்களும் இதே அளவிலான மையத்தினை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஒரு புறம் விற்பனைக்கான வழியை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், மறுபுறம் உற்பத்தியினையும் அதிகரிக்க விரிவாக்கம் செய்து வருகின்றது. இதன் Kratos மின்சார வாகனம் 1,22,499 ரூபாயாகவும், Kratos R 1,37,499 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tork Motors opens first experience centre in pune

Pune-based startup Tork Motors has launched its first offline experience center in Pune as the next step in its growth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X