டோரென்ட் குரூப்-ன் கிளை நிறுவனமான டோரென்ட் கேஸ் லிமிடெட் தமிழ்நாட்டில் அடுத்த 5 வருடத்தில் நகர எரிவாயு விநியோக திட்டத்திற்காக சுமார் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் முழுவதும் அடுத்த 5 வருடத்தில் டோரென்ட் கேஸ் லிமிடெட் 10000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் 5000 கோடி ரூபாய் அதாவது 50 சதவீதம் தொகை தமிழ்நாட்டில், மேலும் டோரென்ட் கேஸ் லிமிடெட் ஏற்கனவே இந்தியாவில் 1,900 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று டோரென்ட் கேஸ் லிமிடெட் சென்னையில் தனது நகர எரிவாயு விநியோக (city gas distribution) திட்டத்தைத் துவங்கியுள்ளது. இந்தியாவில் நகர எரிவாயு விநியோக திட்டத்திற்குத் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு.
டோரென்ட் கேஸ் லிமிடெட் இத்திட்டத்தைச் சென்னையை அடிப்படையாக வைத்துத் துவங்கியுள்ளது. இத்திட்டத்திற்காக 25 சிஎன்ஜி ஸ்டேஷன்களை சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் அமைக்க உள்ளது.

மேலும் இந்தியாவில் டோரென்ட் கேஸ் லிமிடெட் 214 சிஎன்ஜி ஸ்டேஷன்களை அமைக்கவும், 2022 மார்ச்-க்குள் 350 ஆகவும், 2023 மார்ச்-க்குள் 500 ஆகவும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது என டோரென்ட் கேஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஜினால் மேத்தா தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து தமிழக முதல்வர் தனது டிவிட்டரில் Torrent Gas நிறுவனம் வல்லூரில் எரிவாயு விநியோகத்திற்காக நிறுவியுள்ள Mother station மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அமைத்துள்ள 25 CNG நிலையங்களைத் திறந்து வைத்தேன். மாசுபாட்டைக் குறைக்க மாற்று எரிபொருள்களை ஊக்குவிக்கும் முன்னெடுப்புகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
இத்திட்டத்தின் வாயிலாக 33 லட்சத்திற்கும் அதிகமான வீட்டிற்கு பைப் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications