அதானி குழுமத்தில் விழுந்த இடி.. டோட்டல் எனர்ஜீஸ் வெளியிட்ட ஷாக்கிங் அறிவிப்பு..!

அடி மேல அடி வாங்கி வரும் அதானி குழுமத்திற்கு பெரிய இடியாக ஒரு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் SEC, FBI ஆகியவை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கு தொடுத்துள்ள நிலையில், பல இடத்தில் இருந்து பின்னடைவுகளை அதானி குழுமம் எதிர்கொண்டு வருகிறது.

அதானி குழுமம் கொடுத்த 100 கோடி ரூபாய் நன்கொடையை தெலுங்கானா அரசு திருப்பி கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கும் வேளையில், அடுத்த இடியாக அதானி குழுமத்தின் முக்கிய கூட்டாளியான டோட்டல் எனர்ஜீஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதானி குழுமத்தில் விழுந்த இடி.. டோட்டல் எனர்ஜீஸ் வெளியிட்ட ஷாக்கிங் அறிவிப்பு..!

பிரான்ஸ் நாட்டின் முன்னணி நிறுவனமான டோட்டல் எனர்ஜீஸ், இனி அதானி குழுமத்தில் புதிய முதலீடுகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க நீதித்துறையின் வழக்குகளை காரணம் காட்டி இந்த முடிவை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அதானி கிரீன் எனர்ஜீஸ் லிமிடெட் (AGEL) பங்குகள் திங்கள்கிழமை பெரும் வீழ்ச்சியடைந்தன.

கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோர் மீது மோசடி குற்றச்சாட்டுகளுடன் அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்குத் தொடுத்த 24 மணிநேரத்தில் கென்யா அரசு 2 முக்கிய திட்டத்தை மொத்தமாக ரத்து செய்து, அதானி குழுமத்தை மொத்தமாக அந்நாட்டை விட்டு வெளியேற்றும் அளவுக்கு நிலை உருவானது. இந்த நிலையில் அதானி குழுமம் செயல்படும் பிற நாடுகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையில் தான் இன்று தெலுங்கானா அரசும், டோட்டல் எனர்ஜீஸ்-ம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ள நிலையிலும், டோட்டல் எனர்ஜீஸ்-ம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதனால் அதானி கிரீன் எனர்ஜீஸ் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.அதானி கிரீன் எனர்ஜீஸ் பங்குகள் 11% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன. கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் 36.61% வீழ்ச்சியடைந்துள்ளது.

டோட்டல் எனர்ஜீஸ்க்கு அதானி கிரீன் எனர்ஜீஸ் நிறுவனத்தில் 19.75% பங்குகளை நேரடியாக வைத்துள்ளது, அதானி குழுமத்துடன் மூன்று கூட்டணி நிறுவனத்தில் தலா 50% பங்கு உள்ளது. இந்நிறுவனம் தனது நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உறுதியளித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையும் அதானி கிரீன் எனர்ஜி பங்குகளில் பெரும் சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+