அதானி குழுமத்திற்குப் பின்னடைவு.. 50 பில்லியன் டாலர் திட்ட முதலீட்டை நிறுத்திய டோட்டல் எனர்ஜிஸ்..!

பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய எனர்ஜி சேவை நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ், அதானி குழுமத்துடனான 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஹைட்ரஜென் திட்டத்தைத் தற்காலிகமாக ஹோல்டு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் இருந்த அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது, இந்த நிலையில் ஜனவரி 25 ஆம் தேதியில் இருந்து பாதிக்கப்பட்டு வந்த அதானி குழும பங்குகள், 3 நிறுவனத்தின் மீதான கடனை திருப்பிச் செலுத்திய காரணத்தாலும், மத்திய நிதியமைச்சகம், ஆர்பிஐ இந்திய வங்கி அமைப்பு குறித்து வெளியிட்ட நம்பிக்கையாலும் கடந்த 3 நாட்களாக அதானி குழும பங்குகள் உயர்ந்து வந்தது.

இந்த நிலையில் தான் MSCI அமைப்பின் அறிவிப்பும், டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்தின் அறிவிப்பும் வெளியாகி அதானி பங்குகளை மீண்டும் சரிவு பாதைக்குத் தள்ளியுள்ளது.

அதானி குழுமம்

அதானி குழுமம்

அதானி குழுமம் Deloitte, EY, KPMG மற்றும் PwC ஆகிய நான்கு பெரிய கணக்கியல் நிறுவனங்களில் ஒன்றை நியமித்து நிறுவனத்தின் பொதுத் தணிக்கையை மேற்கொள்ள உள்ளது என்று அதானி குழுமத்தின் முக்கியக் கூட்டாணி நிறுவனமாக இருக்கும் Total Energies கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் Total Energies, அதானி குழுமத்திடம் நான்கு பெரிய கணக்கியல் நிறுவனங்களில் ஒன்றை நியமித்து நிறுவனத்தின் பொதுத் தணிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தியது.

ஆய்வு முடிவுகள்

ஆய்வு முடிவுகள்

இதை அதானி குழுமம் ஏற்றுக்கொண்ட நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியில் வரும் வரையில் டோட்டல் எனர்ஜிஸ், அதானி குழுமத்துடனான 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஹைட்ரஜென் திட்டத்தில் பங்குகளை வாங்கும் திட்டத்தை ஹோல்டு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

டோட்டல் எனர்ஜிஸ்

டோட்டல் எனர்ஜிஸ்

கடந்த ஆண்டு டோட்டல் எனர்ஜிஸ், அதானி குழுமத்தின் ஹைட்ரஜென் நிறுவனத்தில் சுமார் 25 சதவீத பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை அளவில் முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்த 50 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தில் 25 சதவீத பங்குகளை வாங்கும் திட்டத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தணிக்கை நிறுவனத்தின் ஆய்வறிக்கை வரும் வரையில் ஹோல்டு செய்யப்பட்டு உள்ளது.

அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

ஜூன் 2022ல் அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் டோட்டல் எனர்ஜிஸ் சுமார் 25 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்தது. இந்த அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் அடுத்த 10 வருடத்தில் சுமார் 50 பில்லியன் டாலரை முதலீட்டுச் செய்யத் திட்டமிட்டு இருந்தது அதானி குழுமம்.

டோட்டல் எனர்ஜிஸ் சிஇஓ

டோட்டல் எனர்ஜிஸ் சிஇஓ

அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 2030க்குள் 1 மில்லியன் டன் ஹைட்ரஜென் வாயுவை உற்பத்தி செய்யும் கட்டமைப்பை இந்த 50 பில்லியன் டாலர் முதலீட்டில் உருவாக்குவதே திட்டம். இந்த நிலையில் இந்த 25 சதவீத பங்குகளை வாங்கும் திட்டத்திற்கு உரிய தெளிவு கிடைத்த பின்பு அதுவரையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படாது என டோட்டல் எனர்ஜிஸ் சிஇஓ Patrick Pouyann தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்ஸைத் தலைமையிடமாகக் கொண்ட டோட்டல் எனர்ஜிஸ் அதானியின் பல குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அதிலும் முக்கியமாக அதானி குழுமத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களில் பெரும் பகுதி பங்குகளைக் கொண்டு உள்ளது.

டோட்டல் எனர்ஜிஸ் முதலீடுகள்

டோட்டல் எனர்ஜிஸ் முதலீடுகள்

பிரான்ஸ் நாட்டின் டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனம், இந்தியாவின் அதானி குழுமத்தின் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தில் 37.4 சதவீத பங்குகளும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் 19.75 சதவீத பங்குகளும் வைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+