2020ல் சிறப்பான வளர்ச்சி அடைந்த கௌதம் அதானியின் அதானி கிரீன் நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களுக்குப் பெருமளவிலான லாபத்தை அளிக்கொடுத்தது. இந்நிலையில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளைப் பிரான்ஸ் நாட்டின் முன்னணி எரிபொருள் நிறுவனமான டோட்டல் கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன்பு 2.35 ஜிகாவாட் சோலான் மின்சாரம் தயாரிக்கும் டோட்டல் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி கூட்டணி நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து தற்போது டோட்டல் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் நேரடியாக 20 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் டோட்டல் நிறுவனம் அதானி குழும நிறுவனத்தில் சுமார் 2.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது.
இந்தியாவில் மிகவும் மலிவான விலையில் renewable மின்சாரத்தைத் தயாரிக்கும் முக்கியமான இலக்குடன் நாட்டின் மொத்த எனர்ஜி துறையை மாற்றி அமைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம். மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 450 ஜிகாவாட் renewable எனர்ஜியை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது அதானி குழுமம்.
அதானி குழுமத்தின் இன்னும் இரண்டு நிறுவனத்தில் பிரான்ஸ் நிறுவனமான டோட்டல் முதலீடு செய்துள்ளது. இதன் படி அதானி கேஸ் நிறுவனத்தின் 37.4 சதவீத பங்குகளையும், தாம்ரா எல்என்ஜி திட்டத்தில் 50 சதவீத பங்குகளையும் டோட்டல் முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் இன்று காலை முதல் மோசமான வர்த்தகச் சூழ்நிலையில் இருந்து நிலையில் வர்த்தகம் முடியும் நேரத்தில் மொத்த சரிவில் இருந்து மீண்டு 1 சதவீதம் வரையில் உயர்ந்து 964 ரூபாய் என்ற விலையை அடைந்தது.
இதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் 0.87 சதவீத உயர்வுடன் 955.95 ரூபாயை அடைந்தது.


Click it and Unblock the Notifications