இந்திய குவிக் காமர்ஸ் துறையில் முடிசூடா மன்னனாக இருக்கும் பிரபல இன்ஸ்டன்ட் டெலிவரி நிறுவனமான Zepto-வில் மோசமான வேலைச் சூழல் நிலவுவதாக, இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் சமுகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. இது தொடர்பான பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த பதிவை ரெட்டிட் தளத்தில் Scary_split3157 என கணக்கில் இருந்து பதிவிடப்பட்டு உள்ளது, இதில் “நான் ஒரு வருடமாக Zepto-வில் பணிபுரிந்து வருகிறேன். இந்த நிறுவனம் மிகவும் விஷத்தன்மையான வேலைச் சூழல். இதற்கு அதிகமான புகழ் கிடைத்திருந்தாலும், உண்மையான நிலைமை எப்படி இருக்கிறது என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பதிவில் பின்வரும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன:
1. செப்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித் பலிச்சா, தாமதமாக எழுந்திருப்பதால் மதியம் 2 மணிக்கு தான் பணியை தொடங்குவார். இதன் காரணமாக, அதிகாலை 2 மணிக்கு மீட்டிங்கிற்கு அழைக்கப்படுகின்றன.

2. பல ஊழியர்கள் பகல் 12 மணிக்கு தான் வேலைக்கு வருகிறார்கள். இதனால், ஊழியர்களை காலை 10 மணிக்கு வேலைக்கு வர ஊக்குவிக்க இலவச காலை உணவு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், இரவு 11 மணிக்கு மேலாக வேலை முடிக்கப்படுகிறது.
3. அனைத்து மீட்டிங்கும் தாமதமாக தொடங்குகின்றன. கூட்டங்கள் நேரத்திற்கு நடைபெறுவதில்லை மற்றும் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன.

4. அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் இத்தகைய வேலைச் சூழலில் பணிபுரிய விரும்பாததால், அதிகமான இளைஞர்கள் வேலைக்கு நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 14 மணி நேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
5. வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக பணம் வசூலிப்பதற்காக பயன்பாட்டில் பல மோசமான வர்த்தக முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. உதராணமாக 30,000 ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள ஃபோன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

6. வாடிக்கையாளர் தரவுகள் அடிப்படையில் ஒவ்வொரு செப்டோ கணக்கும் மதிப்பிடப்பட்டு பிரிக்கப்படுகிறது. மேலும் செப்டோ தளத்தில் பாதுகாப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல தரவு கசிவுகள் ஏற்பட்டிருந்தாலும், வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர் அழுத்தங்கள் காரணமாக இதை சரிசெய்வது முக்கியமானதாக கருதப்படுவதில்லை.

இந்த குற்றச்சாட்டுகள் Zepto நிறுவனத்தின் வேலைச் சூழல் மற்றும் வாடிக்கையாளர் நலன் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன. செப்டோ நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications