மோடி அரசிடம் சூப்பரான கோரிக்கை வைத்த டோயோட்டா.. இதுமட்டும் நடந்துட்டா, வேற லெவல்..!!

இந்திய ஆட்டோமொபைல் சந்தை வேகமாகவும் மாறி வருவது மட்டும் அல்லாமல் வேகமாக வளர்ந்தும் வருகிறது, இந்த நிலையில் இத்துறை வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது கார்களின் அதிகப்படியான விலை தான். இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான கார்கள் அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் வேளையிலும் கார்களின் விலை அதிகமாக இருக்க முக்கிய காரணம் மத்திய மாநில அரசுகளின் வரி தான்.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் டோயோட்டா வேமாக வளர்ந்து வரும் இந்திய சந்தையில் தனக்கான இடத்தை மேம்படுத்த வேண்டும் என மாருதி சுசூகி உடன் இணைந்து கார்களையும், தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து வருகிறது. இந்த நிலையில் டோயோட்டா பிராண்ட் கார்களின் விற்பனையை அதிகரிக்க குறிப்பாக ஹைப்ரிட் கார்களின் விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

 மோடி அரசிடம் சூப்பரான கோரிக்கை வைத்த டோயோட்டா.. இதுமட்டும் நடந்துட்டா, வேற லெவல்..!!

இந்தியாவில் காற்று மாசுப்பாட்டை குறைக்கும் விதமாக எலக்ட்ரிக் கார்களுக்கு குறைவான வரி விதிக்கப்பட்டு இருக்கும் வேளையில், பெட்ரோல் கார்களை காட்டிலும் பெரிய அளவில் மாசுப்பாட்டை குறைக்கும் ஹைப்ரிட் கார்களுக்கான வரியை 5ல் ஒரு பகுதியை குறைக்க வேண்டும் என டோயோட்டா நிறுவனம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, இதை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 5 சதவீத மட்டுமே வரியாக விதிக்கப்படும் வேளையில் பெட்ரோல் கார்களுக்கு 48 சதவநீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஹைப்ரிட் கார்களுக்கு மத்திய அரசு 43 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. டோயோட்டா நிறுவனம் பெட்ரோல் கார்களும், ஹைப்ரிட் கார்களுக்கும் மத்தியிலான 5 சதவீத வரி வித்தியாசம் மிகவும் குறைவு, இது சந்தை வர்த்தகத்தை மேம்படுத்த போதாது என தெரிவித்துள்ளது.

ஹைப்ரிட் கார்கள் குறைந்த அளவிலான எமிஷன்-ஐ கொண்டு உள்ளது, எரிபொருளை குறைவாக பயன்படுத்தும் திறன் கொண்டு உள்ளது. இதனால் பெட்ரோல் கார்களும், ஹைப்ரிட் கார்களுக்கும் மத்தியிலான வெறும் 5 சதவீத வரி வித்தியாசம் சரியானது இல்லை மத்திய அரசின் திங்க் டேங்க் அமைப்பான நித்தி அயோக்-கிற்கு டோயோட்டா கடிதம் எழுதியுள்ளது.

மேலும் இந்த கடிதத்தில் டோயோட்டா நிறுவனத்தின் இந்திய தலைவரான விக்ரம் குலாட்டி பெட்ரோல் கார்களை ஒப்பிடுகையில் ஹைப்ரிட் கார்களுக்கு 11 சதவீதம் வரி குறைவாக இருக்க வேண்டும், இதேபோல் மாற்று எரிபொருள் பயன்படுத்த கூடிய flex இன்ஜின் கொண்ட hybrid வாகனங்களுக்கு 14 சதவீத வரி வித்தியாசம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஹைப்ரிட் கார்களுக்கு 37 சதவீதமும், ஃபிளெக்ஸ் ஹைப்ரிட் இன்ஜின் கொண்ட கார்களுக்கு 34 சதவீத வரியும் விதிக்கப்படும். இதனால் இக்கார்களின் விலை பெரிய அளவில் குறைந்து அதிகப்படியான மக்கள் இதை வாங்க தூண்டப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா ஆகியவை எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கும் வேளையில், டோயோட்டா மற்றும் ஹோண்டா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் ஹைப்ரிட் கார்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் டோயோட்டா-வின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா என்ற கேள்வி உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+