மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜிநகரில் புதிய தொழிற்சாலை அமைக்க டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனத்திற்கு 827 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் டொயோட்டா கிரிலோஸ்கர் மோட்டர் நிறுவனம், கடந்த ஜூலை 31-ஆம் தேதி அன்று மகாராஷ்டிரா அரசுடன் கையெழுத்திட்டுள்ளது. இந்த புதிய தொழிற்சாலை, மின்சார மற்றும் ஹைப்ரிட் கார்களை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா தொழில்துறை நகரம் (MITL) என்ற நிறுவனத்தின் மூலம் மத்திய மற்றும் மகாராஷ்டிரா அரசுகளின் கூட்டு பங்கீட்டில் ஸ்மார்ட் இண்டஸ்ட்ரியல் சிட்டி அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டம் தற்போது முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்த தொழில்துறை நகரத்தின் Bidkin பிரிவில் டொயோட்டா கிரிலோஸ்கர் மோட்டர் பிரைவேட் லிமிடெட்டிற்கு 827 ஏக்கர் நிலம் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.
"டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்த புதிய தொழிற்சாலை திட்டத்திற்கு ரூ. 21,000 கோடி முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது மற்றும் 2026 ஜனவரி மாதத்திலிருந்து உற்பத்தி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 8,000 நேரடி வேலைகள் மற்றும் 18,000 மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
TKM உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ரூ. 20,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 4 லட்சம் மின்சார மற்றும் ஹைப்ரிட் கார்கள் தயாரிக்கப்படும் என்று கூறினார். இந்த திட்டம் ஆட்டோமொபைல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இன்றெல்லாம் பெட்ரோல் டீசல் வாகனங்களை விட இவி வாகனங்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவத்தை வழங்குகின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் என்று பார்த்தால் பெட்ரோல் டீசலின் விலை ஏற்றம். இதனால் இவி வாகனங்களுக்கு மாறத் திட்டமிடும் மக்களுக்கு குறிப்பிட்ட சில பிராண்டுகள் மட்டுமே வழங்கி வருகிறது.
மேலும் பிற கார்களை ஒப்பிடுகையில் இவி வாகணங்கள் இன்னும் மக்கள் மத்தியில் அதிக அளவில் சென்றடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இது போன்ற புது தொழிற்சாலைகள் வரவிருப்பதன் காரணமாக இவி வாகன சந்தை மேலும் வளர்ச்சி அடையலாம் என்றே கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications