பெங்களூர்: ஆட்டோமொபைல் துறையில் இன்றும் இந்தியாவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா கிர்லோஸ்கர். இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தவர் தான் விக்ரம் கிர்லோஸ்கர். இவர் தனது 64 வயதில் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.
விக்ரம் கிர்லோஸ்கரின் மனைவி கீதாஞ்சலி, அவரின் மகள் மான்சி ஆவர்.
விக்ரமின் உடல் நவம்பர் 30 அன்று மதியம் 1 மணிக்கு பெங்களூரில் தகனம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் அறிவிப்பு
விக்ரம் கிர்லோஸ்கரின் இறப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டொயோட்டா இந்தியா நிறுவனம், நவம்பர் 29, 2022 அன்று டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின துணைத் தலைவர் விக்ரம் எஸ் கிர்லோஸ்கரின் மரணம் குறித்து உங்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த வருத்தமடைகிறோம். இந்த சோகமான நேரத்தில் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் தெரிவித்துள்ளது.
டொயோட்டாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு
இந்தியாவில் டொயோட்டா கார்களின் வளர்ச்சிக்கும் கிர்லோஸ்கர் நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. டொயோட்டா நிறுவனம் கிர்லோஸ்கருடன் இணைந்து இங்கு கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. ஆக இந்தியாவில் டொயோட்டாவின் இந்த வளர்ச்சிக்கு விக்ரம் கிர்லோஸ்கரும் முக்கிய பங்கு வகித்துள்ளார் எனலாம்.
கிர்லோஸ்கர் பற்றி
கிர்லோஸ்கர் நிறுவனம் பற்றி சொல்லவேண்டுமெனில், இந்தியாவின் மிக பழமையான நிறுவனங்களில் ஒன்று. விக்ரம் கிர்லோஸ்கர் 4ம் தலைமுறையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ஆரம்ப காலத்தில் பம்பு, இஞ்சின், கம்பிரஷர் என பல பொருட்களை தயாரித்து வந்தது. இப்படி வரலாற்றை கொண்ட வணிக குடும்பத்தில் பிறந்தவர் தான் விக்ரம் கிர்லோஸ்கர்.
பல முக்கிய பதவிகள்
எம்ஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த விக்ரம் கிர்லோஸ்கர், பல முக்கிய பதவிகளை வகித்து வந்தவர். டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
இந்தியாவினை பொறுத்த வரையில் இந்த டொயோட்டா கிர்லோஸ்கர் கூட்டணியில், டொயோட்டா வசம் 89% பங்குகளும், கிர்லோஸ்கர் வசம் 11% பங்கும் உள்ளது.
கிரண் மஜூம்தர் இரங்கல்
பல்வேறு தொழிலதிபர்களும், தலைவர்களும் விக்ரம் கிர்லோஸ்கரின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பயோகானின் நிறுவனர் கிரண் மஜூம்தர், விக்ரமின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விக்ரம் ஒரு அன்பான நண்பர். அவரை மிகவும் இழக்கிறேன். கீதாஞ்சலி, மானசியின் வலியையும் நான் உணர்கிறேன். ஏற்றுக் கொள்ள முடியாது வலியை நானும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி என்றும் பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் சிதம்பரம்
டொயோட்டா கிர்லோஸ்கரின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கரின் மறைவு மிக வருத்தத்தினை அளிக்கிறது. எங்களது தொடர்பில் பல இனிமையான நினைவுகள் உள்ளன. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ஊழியர்களுக்கும் இரங்கல் என்றும் கார்த்திக் சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications