இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் ஏப்ரல் 26 முதல் மே 14 வரையிலான நாட்களுக்கு இந்தியாவில் இயங்கி வரும் இரு தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூட முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் தொழிற்சாலையில் மெயின்டனன்ஸ் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ். இதேபோன்ற அறிவிப்பைத் தான் சில நாட்களுக்கு முன்பு நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் தெரிவித்தது.

ஏப்ரல் 26 முதல் மே 14 வரையிலான காலகட்டத்தில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் பிடாடி தொழிற்சாலையில் கார் உற்பத்தி பணிகளை முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இக்காலகட்டத்தில் நிலுவையில் இருக்கும் கார்களை விற்பனை செய்யும் பணிகளைச் செய்ய டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கிட்டத்தட்ட 20 நாட்கள் மெயின்டனன்ஸ் பணிகள் மேற்கொள்ளும் நேரத்தில் குறைந்த அளவிலான ஊழியர்களுக்கு மட்டுமே தொழிற்சாலையில் அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்படும் ஊழியர்களும் சமூக இடைவெளி மற்றும் இதர கொரோனா வழிமுறைகளைக் கடைப்பிடித்து பணியாற்ற உள்ளனர்.
மேலும் டொயோட்டா இந்தியாவில் கிளான்ஸா, அர்பன் க்ரூசியர் ஆகிய கார்களை வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் காரணத்தால் இந்தக் கார்களுக்கு எவ்விதமான தட்டுப்பாடும் இருக்காது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக, இந்தியாவில் இருக்கும் தனது உற்பத்தி தொழிற்சாலைகள் அனைத்தையும் தற்காலிகமாக மூடியுள்ளது. இதன் மூலம் ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ள இந்த நேரத்தில் அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தி தளத்திலும் maintenance பணிகளை முழுமையாக முடிக்கப்படத் திட்டமிட்டுள்ளது ஹீரோமோட்டோகார்ப் நிறுவனம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications