இந்திய ஆட்டோமொபைல் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்தியாவில் ப்ரீமியம் கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புது புது கார்களை அறிமுகம் செய்ய தயாராகியுள்ளது. இதிலும் முக்கியமாக எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்களை அறிமுகம் செய்வதில் ஆர்வமாக உள்ளது.
இதேவேளையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிரென்டிங் மாறிக்கொண்டே இருக்கிறது. சில வருடங்களுக்கு முன் ஹைட்பேக் கார்கள் தான் பெஸ்ட் என பார்க்கப்பட்டது, இதன் பின்பு செடா் கார்கள் வேற லெவல் என புகழப்பட்டது. இதை தொடர்ந்து பட்ஜெட் விலையில் வந்த எஸ்யூவி கார்களின் வெற்றி மூலம் 2 - 3 வருடமாக எஸ்யூபி ராஜ்ஜியமாக உள்ளது.
ஆனால் கடந்த ஒரு வருடத்தில் அறிமுகமான 4 செடான் ப்ரீமியம் கார்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள காரணத்தால் மீண்டும் செடான் ராஜ்ஜியம் வருமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இதே நேரத்தில் தான் எலக்டரிக் கார்களின் வருகையும் விற்பனையும் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையை புரட்டிப்போட்டு உள்ளது.
அதிலும் முக்கியமாக டாடா அறிமுகம் செய்துள்ள அனைத்து எலக்ட்ரிக் கார்களும் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்தது மட்டும் அல்லாமல் இதன் வெற்றி உள்நாட்டு நிறுவனங்கள் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரையில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யவும் அறிமுகம் செய்யவும் தூண்டியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
டொயோட்டா மோட்டார் கார்ப் வருகிற 2026 ஆம் ஆண்டிற்குள் 10 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை மாடல்களை அறிமுகப்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது என வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா-விடம் இருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
உலகளவில் கார் உற்பத்தியிலும், விற்பனையிலும் முன்னோடியாக இருக்கும் டொயோட்டா, எலக்ட்ரிக் வாகன பிரிவில் தனது வேகத்தை காட்டமலேயே இருந்தது. இந்த நிலையில் அடுத்த தலைமுறை எலக்ட்ரிக் வானங்களில் கவனம் செலுத்த டொயோட்டா ஒரு புதிய, சிறப்புப் பிரிவை அமைக்கும் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

டெஸ்லா-வுக்கு போட்டியாக பல புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வந்தாலும், பல வருடமாக சந்தையில் இருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இணையாக போட்டிப்போட முடியாது. இந்த நிலையில் டொயோட்டாவும் முழு எலக்ட்ரிக் வாகனங்களில் கவனம் செலுத்தாமல் ஹைப்ரிட் வாகனங்களில் மட்டுமே அதிகப்படியான கவனத்தை செலுத்தி வந்தது.

இந்த நிலையில் டொயோட்டா மோட்டார் கார்ப் வருகிற 2026 ஆம் ஆண்டிற்குள் 10 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்திய சந்தையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். சமீபத்தில் டொயோட்டா அறிமுகம் செய்த ஹைப்ரிட் கார்கள் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications