இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய கிரெடிட் ஸ்கோர் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். ஸ்கோர் விவரங்களை சரி பார்த்து, குறைவாக இருந்தால் அதை சரி செய்வதன் மூலம் நீங்கள் நல்ல நிதி நடத்தை உடையவராக மாற முடியும். இதனால் உங்களுக்கு விரைவில் வங்கி கடன்கள், கிரெடிட் கார்டுகள் போன்றவை கிடைக்கும். அதோடு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்கும் பட்சத்தில் சிறந்த வட்டி விகிதங்களில் கடன்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?: கிரெடிட் ஸ்கோர் என்பது 3 எழுத்து எண் ஆகும். இதனை சிபில் ஸ்கோர் என்றும் கூறுவார்கள். இந்த எண் 300 முதல் 900 வரையில் இருக்கும். வங்கிகள் உங்களுடைய நிதி நடத்தை எப்படி இருக்கும் என்பதை இந்த ஸ்கோரை வைத்துதான் தெரிந்து கொள்ளும். உதாரணமாக நீங்கள் ஏற்கனவே கடன் பெற்று அதை சரிவர திருப்பி செலுத்தி இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 750-க்கும் மேல் இருக்கும்.

அதுவே நீங்கள் கடன் பெற்று, ஏதேனும் தவணையை தவறவிட்டிருந்தாலோ அல்லது காலக்கெடுவை மீறி தவணை செலுத்தி இருந்தாலோ உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கலாம். அப்படி இருந்தால் நீங்கள் நல்ல நிதி நடத்தை உடையவராக வங்கிகள் கருத்தில் கொள்ளாது.
இந்த சிபில் ஸ்கோர் பற்றிய விவரங்களை 4 முக்கிய கடன் பணியகங்கள் வழங்குகிறது. அவை ட்ரான்ஸ் யூனியன் சிபில், எக்ஸ்பீரியன், Equifax மற்றும் CRIF ஹை மார்க். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் உரிமம் பெற்ற இந்த நிறுவனங்கள் கடன் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் சேகரித்து, அதை பகுப்பாய்வு செய்து, கடன் வழங்குபவர்கள் தகவல் அறிந்து கடன் தரும் வகையில் சிபில் ஸ்கோரை வழங்குகின்றன. இந்த சிபில் ஸ்கோரை கொண்டு தான் வங்கிகளும் ஒருவருக்கு கடன் வழங்க முன் வருகின்றன.
உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 700-க்கும் அதிகமாக இருந்தால் அது நல்ல கிரெடிட் ஸ்கோராக கருதப்படும். ஒரு வேலை உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் வங்கிகள் உங்களுக்கு கடன் தரலாமா? அல்லது வேண்டாமா? என யோசித்து தான் முடிவு எடுக்கும்.
பொதுவாக இந்த கிரெடிட் ஸ்கோரை பெரும்பாலானோர் சரி பார்ப்பதில்லை. ஆனால் சரி பார்த்து கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவசர தேவைகளுக்கு கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். உங்கள் சிபில் ஸ்கோரை இலவசமாக சரி பார்ப்பது எப்படி என்பது குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவுள்ளோம்.
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ சிபில் இணையதளத்தை பார்வையிடவும். அதில் உங்களுடைய அடிப்படை விவரங்களை வழங்க வேண்டும். "கெட் யுவர் சிபில் ஸ்கோர்" என்ற செக்ஷனுக்கு செல்லவும்.
ஸ்டெப் 2: அதில் உங்களுடைய அடிப்படை விவரங்களை வழங்க வேண்டும். உதாரணமாக முழு பெயர், மொபைல் நம்பர், ஈ-மெயில் முகவரி போன்றவற்றை வழங்க வேண்டும். அதன் பிறகு "கண்டினியூ டு ஸ்டெப் 2" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: தற்போது உங்களுடைய பான் நம்பரை வழங்க வேண்டும். பான் நம்பர் சரியாக இருக்கிறதா? என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 4: கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். அதன் பின்னர் உங்கள் பதில்களை வைத்து சிபில் ஸ்கோர் கணக்கிடப்பட்டு கிரெடிட் ரிப்போர்ட் உருவாக்கப்படும்.
ஸ்டெப் 5: அடிக்கடி கிரெடிட் ரிப்போர்ட்டை பார்க்க நினைத்தால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு முறை பார்த்துவிட்டு "நோ தேங்க்ஸ்" என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும்.
ஸ்டெப் 6: உங்களுடைய இமெயில் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை பயன்படுத்தி உள் நுழையுங்கள். உள் நுழைந்ததும் உங்களுடைய மொபைல் நம்பரை வழங்கி சப்மிட் என்பதை தேர்ந்தெடுக்கவும். டேஷ் போர்டில் சிபில் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ரிப்போர்ட் காண்பிக்கப்படும். தேவைப்பட்டால் நீங்கள் அந்த ரிப்போர்ட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications