இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை (Trade deficit) ஏப்ரல் மாதத்தில் 19.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என மத்திய வர்த்தகத் துறை செயலாளர் சுனில் பார்த்தவால் புதன்கிழமை அறிவித்தார்.
இந்தியாவில் பொதுத்தேர்தல் முக்கியக்கட்டத்தை எட்டியிருக்கும் வேளையில் நாட்டின் ஜிடிபி, பணவீக்கம், வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, இறக்குமதி வரையில் அனைத்து விஷயங்களும் முக்கிய விவாத பொருளாக மாற்றியுள்ளது. சமீபத்தில் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவன சிஇஓ-வின் ஜிடிபி குறித்த பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உருவாக்கிய மேக் இன் இந்தியா பிரச்சாரம் மற்றும் கவர்ச்சிகரமான PLI திட்டத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்து அதிகப்படியான நிறுவனங்கள் இந்திய சந்தையில் தனது கால்தடத்தை பதித்தது.
இதன் மூலம் மேக் இன் இந்தியா திட்டம் மிகப்பெரிய வெற்றி எனவும் பேசப்பட்டு வரும் வேளையில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை குறித்த தரவுகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய பொருளாதார வல்லுநர்களின் கணிப்பின் படி, ஏப்ரல் மாத இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 17.23 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பதிவானதோ 19.1 பில்லியன் டாலராக உள்ளது.
மார்ச் 2024ல், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 11 மாதங்களில் இல்லாத அளவு குறைந்து 15.6 பில்லியன் டாலராக பதிவான நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் 19.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் படி ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி (Merchandise exports) கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.06 சதவீதம் அதிகரித்து 34.99 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதே காலகட்டத்தில், இறக்குமதி 54.09 பில்லியன் டாலராக இருந்தது.
இது மார்ச் மாதத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முறையே 41.68 பில்லியன் டாலராகவும் மற்றும் $57.28 பில்லியன் டாலராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாத வர்த்தகப் பற்றாக்குறை கணிப்புகளை மீறி அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் பதிவான 11 மாத குறைந்த வர்த்தகப் பற்றாக்குறையைத் தொடர்ந்து இந்த உயர்வு பதிவாகியுள்ளது கவனிக்க வேண்டியது.
வர்த்தகப் பற்றாக்குறை என்றால் என்ன?: ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருக்கும் நிலையே வர்த்தகப் பற்றாக்குறை எனப்படும். இதன் விளைவாக, அந்நாட்டின் வெளிநாட்டுக் கடன் அதிகரிக்கக்கூடும், இதில் நாணய மதிப்பும் பாதிக்கப்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications