அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீத வரி விதிப்பதாக நேற்று அறிவித்த நிலையில், டிரம்ப்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐரோப்பா தற்போது அமெரிக்கா உடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவில் உள்ளது. இதன் மூலம் மீண்டும் வர்த்தக சந்தை மீதான அதிர்ப்தி உருவாகியுள்லது.
இவை அனைத்திற்கும் கிரீன்லாந்து தான் முக்கிய காரணமாக உள்ளது, அமெரிக்கா எப்படியாது கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உள்ளது, ஆனால் டென்மார்க், ஐரோப்பா அதை வன்மையாக கண்டித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது இரு அமெரிக்கா - ஐரோப்பிய ஓன்றியத்திற்கு மத்தியிலான வர்த்தக உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்கம், வெள்ளி மீதான முதலீடு மீண்டும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிரம்ப்பின் அறிவிப்பு விவரங்கள்
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பிப்ரவரி 1, 2026 முதல் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுகே, நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய 8 நாடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். ஜூன் 1, 2026 முதல் இந்த வரி 25 சதவீதமாக உயரும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு "முழுமையாக விற்கப்படும்" வரை இந்த வரி தொடரும் என்று டிரம்ப் மிரட்டல் தொனியில் தெரிவித்துள்ளார். இந்த நாடுகள் அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும்போது இந்த வரி விதிக்கப்படும்.
ஐரோப்பிய ஓன்றியத்தின் பதிலடி
ஐரோப்பிய ஓன்றியத்தின் (EU) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்த தயாராக உள்ளனர். ஐரோப்பிய மக்கள் கட்சியின் தலைவர் மேன்ஃப்ரெட் வெபர் சமூக ஊடகத்தில், EU-US வர்த்தக ஒப்பந்தத்தை ஆதரிக்கிறோம், ஆனால் டிரம்ப்பின் கிரீன்லாந்து அச்சுறுத்தலால் ஒப்புதல் சாத்தியமில்லை என்று பதிவிட்டார்.
ரெசிப்ரோக்கல் வரி விவகாரத்தில் இரு நாடுகளின் அரசும் ஆலோசனை நடத்தி ஐரோப்பிய ஓன்றிய பொருட்களுக்கு 15 சதவீத மட்டுமே அமெரிக்கா வரி விதிக்கும் என்று கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் விதிகள், தளர்வுகள் ஓரளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, ஆனாலும் இந்த ஒப்பந்த விதிகளை முழுமையாக செயல்படுத்த நாடாளுமன்றத்தில் ஒப்புதல் இன்னும் தேவை.
இந்த நிலையில் கிரீன்லாந்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடதுசாரி குழுக்களுடன் இணைந்தால் அமெரிக்கா - ஐரோப்பா மத்தியிலான ஒப்பந்தத்தை தாமதப்படுத்தலாம் அல்லது தடை செய்யப்படலாம்.
டிரம்ப் அறிவித்துள்ள இப்புதிய வரி அறிவிப்பு ஐரோப்பிய ஓன்றியத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த ஆண்டு கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்க பொருட்களுக்கு ஐரோப்பிய ஓன்றியத்தில் தடை நீக்கிய நிலையில், டிரம்ப்பின் புதிய நடவடிக்கை இரு தரப்பு உறவை பாதிக்கும் வகையில் உள்ளது.
கிரீன்லாந்து டென்மார்க்கின் ஒரு பகுதி என்பதால் இந்த பிரச்சினை ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாக. உலக வர்த்தகத்தில் இது புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. முதலீட்டாளர்கள் வர்த்தக போரின் தாக்கத்தை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
More From GoodReturns

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications