சர்வதேச வர்த்தகத்தில் சமீப காலமாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதுவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரெசிபுராக்கல் வரிமுறையை கொண்டு வந்த பிறகு அமெரிக்காவுடன் முக்கிய வர்த்தக கூட்டாளர்களாக இருக்கும் கனடா, சீனா, மெக்சிகோ, இந்தியா போன்ற நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க வரிசையில் சீனாவும் தற்போது இணைந்துள்ளது.
கனடா, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள், ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களுக்கு அக்டோபர் மாதம் வரி விதித்தது. இதற்கு பதிலடியாக கனடாவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் விவசாயம் சார்ந்த உணவுப் பொருட்களுக்கு சீனா சனிக்கிழமை அன்று வரிவிதித்துள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சகம் மார்ச் 20-ஆம் தேதி முதல் இந்த புதிய வரிகளை அமல்படுத்த உள்ளது.

சீனாவின் வர்த்தக அமைச்சகம் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ராப்சீட் எண்ணெய், புண்ணாக்கு மற்றும் பட்டாணி ஆகியவற்றிற்கு சீனா 100 சதவீத வரியும், நீர் வாழ் பொருட்களான மீன், இறால் மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றுக்கு 25 சதவீத வரியும் விதிக்கவுள்ளது.
கனடா, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரியும், அலுமினியம் மற்றும் ஸ்டீல் பொருட்களுக்கு 25 சதவீத வரியும் விதித்தது. இந்த வரிகள், உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிரானது என்று சீனா குற்றம் சாட்டியது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகஸ்ட் மாதம் கூறுகையில், "சீனா வேண்டுமென்றே அரசு உதவியுடன் அதிகம் உற்பத்தி செய்கிறது. இதனால், கனடாவின் உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. இதை சமாளிக்கவே இந்த வரிகளை விதித்ததாக தெரிவித்தார்". அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சீனா, கனடாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகும்.
சீனா பல பொருட்களை உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் பெரும்பாலான பொருட்களை பார்த்தால் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டதாக கொடுக்கப்பட்டிருக்கும். ஸ்மார்ட் ஃபோன்கள், டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சார வாகனங்கள், ஆடைகள் காலணிகள், தொழில் துறை இயந்திரங்கள், கட்டுமான உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், பொம்மைகள், ஸ்டீல், அலுமினியம் என உலகளாவிய உற்பத்தி மையமாக சீனா உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வகையான பொருட்களுமே இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
கனடாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள வரிமுறையின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications