தீபாவளி என்றாலே நம்மவர்களுக்கு நினைவுக்கு வருவது வெடியும் சத்தமும் தான். பிறகு தான் இந்த இனிப்புகளும் பலகாரங்களும். ஆனால் நடப்பு ஆண்டில் நாட்டில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக பட்டாசு விற்பனை 30 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக வர்த்தகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் நிலவி வரும் மந்த நிலையால் தூண்டப்பட்ட பண நெருக்கடியும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மேலும் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பசுமை பட்டாசுக்கு மட்டுமே அனுமதி
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் இந்திய வானத்தை அதிக வண்ணத்துடன் நிரப்பியது என்றும், ஆனால் குறைந்த சப்தத்துடன் இருந்தது என்றும் கூறப்படுகிறது. எப்படி எனினும் கடந்த ஆண்டை காட்டிலும் மொத்த விற்பனை 20 - 30 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், குறிப்பாக சத்தம் அதிகம் சத்தம் மிகுந்த பட்டாசுகள் 50 சதவிகிதம் விற்பனை சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல காரணிகள் உண்டு
உச்ச நீதிமன்றத்தின் பசுமை பட்டாசுகள் உத்தரவால், இந்த விற்பனை குறைந்தது என்று கூறப்பட்டாலும், தீபாவளி வரை நீடித்த பருவகாலம், நீடித்த பருவமழை, மேலும் உரிமங்கள் வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட பல காரணிகள் விற்பனை குறைந்தது என்றும் வர்த்தகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
குறுகிய காலத்தில் உரிமம் பெற வேண்டும்
பட்டாசுகளை விற்க உரிமம் பெற மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகம், தீயணைப்பு படை, தடய அறிவியல் துறை, நகராட்சி அலுவலகத்திலும் அனுமதி பெற வேண்டும் என்றும், மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் இது போன்ற அறிக்கைகள் கடைசி நிமிடத்தில் தரப்படுவதால் விற்பனை குறைவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் நடப்பு ஆண்டில் 10 நாட்களுக்கு முன்பு மட்டுமே அனுமதி கிடைத்தது என்றும், இந்த குறுகிய காலத்தில் நாங்கள் எவ்வளவு விற்க முடியும்? எதை விற்க முடியும் என்றும் Phataka Welfare Association நிலேஷ் அகர்வால் கூறியுள்ளார்.
பட்டாசு தேவை அதிகரிப்பு
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்நாட்டு பட்டாசு, தீபாவளி பருவத்தில் 90 சதவிகித பொருட்களை விற்பனை செய்தது. ஆனால் சமீபத்திய காலங்களில் பிற பிராந்திய விழாக்கள், மத விழாக்கள், திருமண காலம், இது தவிர சிறப்பு சந்தர்ப்பங்களில் பட்டாசுகள் தேவை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் தமிழகத்தின் சிவகாசியில் முக்கிய குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். இதில் 1000க்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்ற உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதன் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வேலை செய்து வருகின்றனர். இது தவிர ராஜஸ்தான், மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்களாத்தின் சில பகுதிகளிலும் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
உற்பத்தியும் சரிவு
கடந்த ஆண்டு அக்டோபரில் உச்ச நீதிமன்றம் பசுமை இல்லாத பட்டாசுகளை தடை செய்தது. அதாவது 145 டிபிக்கு அதிகமான சத்தம் கொண்ட பட்டாசுகளை உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பெசோ) ஒப்புதல் பெறுமாறு பணிகப்பட்டனர். பட்டாசுகள் பாதரசம் ஆர்சனிக் மற்றும் பேரியம் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த நிலையில் கடந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு சிவகாசியில் உள்ள சில உற்பத்தி ஆலைகள் ஐந்து மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டன. பின்னர் பருவமழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
விற்பனை சரிவு
குறிப்பாக மும்பை தானே பகுதிகளில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் கடந்த ஆண்டின் விற்பனையை விட விற்பனை 30 சதவிகிதம் குறைந்ததுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது இங்கு மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் இப்படி தான் இருப்பதாகவும் மும்பை தானே பட்டாசு சங்கத்தின் தலைவர் நவீன் சந்திரா கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications