இந்தியாவில் ஐடி உள்ளிட்ட துறைகள் எல்லாம் மந்தமடைந்து வேலை வாய்ப்பு கிடைப்பதே குதிரைக்கொம்பாக மாறிப் போயிருக்கிறது. பட்டப்படிப்பை முடித்த பலரும் தாங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் தங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என புலம்பி தள்ளுகின்றனர். இந்த சூழலில் தான் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைப்பது தெரிய வந்திருக்கிறது.
ஹை ஸ்பீடு டிரேடிங் நிறுவனங்களில் தற்போது நல்ல சம்பளத்தில் என்ட்ரி லெவல் நிலையிலேயே நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கிறதாம். ப்ளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி படி பார்த்தால் ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய ஐஎம்சி டிரேடிங் மற்றும் இந்தியாவின் Quadeye போன்ற டிரேடிங் நிறுவனங்களில் நிறுவனங்களில் இந்தியாவை சேர்ந்த நபர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் தற்போது சில்லறை முதலீட்டாளர்கள் பலரும் டெரிவேட்டிவ்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. எனவே இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு டிரேடிங்கை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்த இந்த டிரேடிங் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. ஐ எம் சி டிரேடிங் நிறுவனத்தை பொருத்தவரை தங்கள் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் வருபவர்களுக்கே 12.5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மூன்று மடங்கு அதிகமாகும் .
இந்தியாவில் Quadeye நிறுவனம் மாதத்திற்கு 7.5 லட்சம் ரூபாய் வரை சம்பளத்தில் ஃபிரஷர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்குகிறது. உலகளவில் டெரிவேட்டிவ்களில் அதிக வர்த்தகம் நடக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. அதிக லாபம் தரும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
இந்திய டெரிவேட்டிவ் சந்தைகளில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும் சில்லறை முதலீட்டாளர்கள் பணம் செலுத்தி டிரேடிங்கில் நஷ்டம் அடைந்து வருவதை குறைக்கவும் செபி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் சில்லறை முதலீட்டாளர்கள் இந்த டிரேடிங்கில் ஈடுபடுவது அதிகரித்து தான் இருக்கிறது .
டெரிவேட்டிவ் பிரிவில் உலகிலேயே மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. எனவே தான் ஹை ஸ்பீடு டிரேடிங் நிறுவனங்கள் இந்த பிரிவில் அதிக கவனம் செலுத்துகின்றன . குறிப்பாக பல்வேறு நிறுவனங்களும் கூட இது போன்ற நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கான போர்ட்போலியோ பராமரிப்புக்கு வருகிறார்களாம்.செபியின் கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும் இந்தியாவில் வர்த்தகம் என்பது வளர்ச்சி அடைந்து தான் வருகிறது.


Click it and Unblock the Notifications