இன்றைக்கு நிறைய பேர் கார்கள், 2 சக்கர வாகனங்களை வைத்துள்ளனர். வாகனங்களை வைத்திருக்க அதுமட்டும் போதாது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் காருக்கான ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு ஆவணம் இல்லாவிட்டாலும் டிராபிக் போலீஸார் அபராதம் விதித்து விடுவார்கள். நீங்கள் வைத்திருக்க வேண்டிய 4 ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
1. டிரைவர் லைசென்ஸ்: டிரைவர் லைசென்ஸ் தான் ஒருவர் வாகனத்தை ஓட்டுவதற்கு அறிந்தவர். தகுதியானவர் என்று உறுதி செய்யும் சான்று ஆகும். டிரைவர் லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே வாகனம் ஓட்டும் சமயத்தில் எப்போதும் உங்கள் கையில் டிரைவர் லைசென்ஸை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

2. ரெஜிஸ்டிரேஷன் சர்டிபிகேட்: ஆர்சி எனப்படும் இந்த ரெஜிஸ்டிரேஷன் சர்டிபிகேட்டை வைத்திருக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இந்த சர்டிபிகேட் தான் உங்களது வாகனம் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும். ஒவ்வொரு ரெஜிஸ்டிரேஷன் சர்டிபிகேட்டுக்கும் ஒரு நம்பர் உண்டு. அதுதான் உங்களது வாகனத்தின் நம்பர் ஆகும். இந்த சர்டிபிகேட்டை வைத்திருக்காவிட்டால் ஆயிரக்கணக்கான அபராதத்தை தண்டமாகச் செலுத்த வேண்டி இருக்கும்.
3. இன்சூரன்ஸ் பாலிஸி: மனிதர்களுக்கு ஆயுள் காப்பீடு போலத்தான் இந்த இன்சூரன்ஸ் பாலிஸி வாகனங்களுக்கு இருக்க வேண்டும். இந்த இன்சூரன்ஸ் பாலிஸி இல்லாமல் உங்களது வாகனத்தை இயக்கக் கூடாது. அவசியம் வை்த்திருக்க வேண்டும். இது இல்லாவிட்டால் வாகனத்தை இயக்கும்போது டிராபிக் போலீஸாரால் அபராதம் விதிக்கப்படும். ஓராண்டுக்கு எடுக்கப்படும் இந்த பாலிஸியை மீண்டும் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
4. மாசுகட்டுப்பாடு சான்றிதழ்: டிரைவர் லைசென்ஸ், ஆர்சி, இன்சூரன்ஸ் பாலிஸி போல வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாடு சான்றிதழும் இருக்க வேண்டும். இந்த சான்றிதழ்தான் உங்களது வாகனம் மாசு உருவாக்குவது என்பதை நிரூபிக்கும். இந்த மாசு கட்டு்பபாடு சான்றிதழ் இல்லாவிட்டால் டிராபிக் போலீஸார் அபராதம் விதிப்பார்கள்.
தமிழ்நாட்டில் இப்போது இந்த சான்று இல்லாதவர்களுக்கு ரூ.100 அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாவிட்டால் முதல்முறைக்கு ரூ.1000 மும் இரண்டாவது முறைக்கு ரூ.2000 மும் அபராதம் விதிக்கப்படும்.
எனவே இந்த 4 சான்றிதழ்களையும் வாகன ஓட்டிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வீணாக தண்டம் கட்ட வேண்டியிருக்கும். போக்குவரத்து விதிமீறலைத் தடுப்பதற்காக இப்போது டிராபிக் போலீஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
வாகனங்களுக்குத் தேவையான ஆவணங்களை வாகன ஓட்டிகள் வைத்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய போலீஸார் அடிக்கடி வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு தவறு செய்பவர்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர்.
Story written by: Jayachandran
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications