இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEBI நாக்பூர்-அடிப்படையிலான Trafiksol ITS Technologies நிறுவனத்தின் IPO-வை ரத்து செய்துள்ளது. இந்த நிறுவனம் போக்குவரத்து மற்றும் டோல் மேலாண்மை திட்டங்களுக்கான போக்குவரத்து அமைப்புகள் மற்றும் ஆட்டோமேஷன் தீர்வுகளை வழங்குகிறது.
சிறு முதலீட்டாளர் நல சங்கம் (SIREN) சமர்ப்பித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் ரூ.17.70 கோடி மதிப்புள்ள மென்பொருளை சந்தேகத்திற்குரிய நிதி நிலைமை கொண்ட வியாபாரியிடமிருந்து வாங்கியதும், அதை தனது நிதி அறிக்கையில் வெளியிடாமல் மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மும்பை பங்குச்சந்தை உடன் SEBI-யுடன் கலந்தாலோசித்து, பங்குகளின் பட்டியலிடலை ஒத்திவைத்தது. பின்னர், விரிவான விசாரணைக்குப் பிறகு, SEBI அமைப்பு தற்போது IPO-ஐ முற்றிலுமாக ரத்து செய்யும் தீவிர நடவடிக்கையை எடுத்துள்ளது.
Trafiksol நிறுவனம் ஐபிஓ-வில் சுமார் 64.10 லட்சம் பங்குகளை 66 முதல் 70 ரூபாய் மதிப்பில் செப்டம்பர் 10-12 வரையிலான தேதியில் விற்பனை செய்தது, இந்த பங்குகள் மீது சுமார் 345.65 மடங்கு அதிக சப்ஸ்கிரிப்ஷன் குவிந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிட திட்டமிட்ட போது தான் புகார் எழுந்து தடைபெற்றது.
செபி உத்தரவின் அடிப்படையில் Trafiksol-ஐ முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தை வட்டியுடன் திருப்பித் தர உத்தரவிட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை நிறுவனத்தின் வங்கியாளர்களுடன் இணைந்து, இந்த நிதியை திருப்பிச் செலுத்தும் செயல்முறையை மேற்பார்வையிடும். மேலும், நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை ரத்து செய்து, தனது பெயரில் தனி டீமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும்.
SEBI-யின் இந்த நடவடிக்கை முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் இந்திய மூலதன சந்தைகளின் நேர்மையைப் பேணுவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளது. செபி அமைப்பு Trafiksol ITS Technologies நிறுவனத்தின் IPO-வை ரத்து செய்துள்ளது தொடர்பாக 16 பக்க அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
IPO வெளியிட திட்டமிடும் நிறுவனங்களுக்கு, வெளிப்படைத்தன்மை, வணிக நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை விதிமுறைகளின் இணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் செபியின் இந்த உத்தரவு அமைந்துள்ளது. மேலும் இந்த ஐபிஓ-வில் முதலீட்டாளர்களுக்கு எவ்வாறு பணத்தை திரும்ப அளிக்கப்படுகிறது என்பதை செபி தீவிரமாக கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications