திருச்சியைச் சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி ஒருவர் பிரபல ஈகாமர்ஸ் தளமான அமேசானில் நூடுல்ஸ் வாங்கி இரவு மாணவியின் தந்தை, அண்ணன் ஆகியோர் சமைத்து மூவரும் சாப்பிட்டுள்ளனர். இரவு சாப்பிட்டுவிட்டுத் தூங்கிய மாணவி காலையில் எழுந்திருக்காத நிலையில், அருகில் சென்று பார்த்த போது வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த நூடுல்ஸ் பாக்கெட் பிரபல கொரிய பிராண்டான புல்டாக் நிறுவனத்துடையது.
செப்டம்பர் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறுமி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. திருச்சியில் உள்ள அவரது வீட்டில் மாணவி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் நூடுல்ஸ் சாப்பிட்டதால் தான் சிறுமி உயிரிழந்தாரா என்பது தெரியவில்லை. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் அளித்த நிலையில், காவல் துறை சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு செய்வதற்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது அனைத்துமே ஆன்லைன்மயம் ஆகிவிட்டது. ஷாப்பிங் முதல் மருத்துவ ஆலோசனை வரை அனைத்தையும் ஆன்லைனில் செய்கின்றனர் மக்கள். இதன் விளைவாக தற்போது ஆன்லைன் டெலிவரி சேவைகள் அதிகரித்து விட்டன. ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது சில நிமிடங்களில் பொருட்கள் நம் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படுகின்றன. இதனால் மக்கள் கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கும் வழக்கம் குறைந்துவிட்டது.
அப்படித்தான் திருச்சியைச் சேர்ந்த இந்த சிறுமியும் "புல்டாக் நூடுல்ஸ்" பாக்கெட்டை ஆர்டர் செய்துள்ளார். கீழ அம்பிகா புரத்தைச் சேர்ந்த இந்த சிறுமி சனிக்கிழமை இரவு உணவிற்கு அந்த புல்டாக் நூடுல்ஸ்-ஐ சாப்பிட்டுள்ளார்.
எனவே ஆன்லைனில் பொருட்களை வாங்கினாலும், மக்கள் பொருட்களின் காலாவதியான தேதியை கட்டாயம் சரிபார்க்க வேண்டியது அவசியமாகும். இதேபோல் ஆன்லைனில் வாங்கும் உணவுப் பொருட்கள் சேதமடைந்தாலோ, பாக்கெட் கிழிந்து இருந்தாலோ அதை திருப்பி அனுப்புவது உத்தமம்.


Click it and Unblock the Notifications