திருவனந்தபுரம்: டெபாசிட் செய்த தொகையை திருப்பி செலுத்த வங்கி தாமதித்ததால், 52 வயது நபர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவை கதிகலங்க வைத்துள்ளது. அதனைப் பற்றிய விரிவான விபரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
சோமசாகரம் என்னும் 52 வயது நபர் பெரும்பழுத்தூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ. 6 லட்சத்தை டெபாசிட் செய்து வைத்துள்ளார். இவர் இந்தத் தொகையை வாழை பயிர் சாகுபடி மற்றும் கொத்து வேலை செய்து சேமித்ததாகவும் மற்றும் அதனை தன் மகளின் திருமணத்திற்கும், தான் தங்கி இருந்த வீட்டினை புதுப்பிக்கவும் சோமசாகரம் சேமித்ததாகக் கூறப்படுகிறது.

தன் மகன் ஒவ்வொரு ரூபாயையும் மிகவும் கஷ்டப்பட்டு விவசாயம் மற்றும் கொத்து வேலை செய்து, தனது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்ததாகவும், மேலும் தனது வீட்டின் சீலிங் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலைமையில் இருந்ததால் அதனை புதுப்பிக்கவும் தொடர்ந்து சேமித்ததாகவும், அந்தப் பணத்தைத் திரும்பப் பெற பெரும்பழுத்தூரில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு பலமுறை சென்றதாகவும், ஆனால் அவர்கள் பணத்தை வழங்க மறுத்து, வெவ்வேறு சாக்குப் போக்குகளை சொல்லி அவரைத் திருப்பி அனுப்பியதாகவும் சோமசாகரத்தின் தந்தை யேசுதாஸ் கூறியுள்ளார்.
PTIஇன் தரவுகளின் படி கடந்த ஆறு மாத காலமாக சோமசாகரம் வங்கிக்குச் சென்று, தான் டெபாசிட் செய்த பணத்தை வித்ட்ரா செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சோமசாகரம், ஏப்ரல் 19ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளார். இதனை அடுத்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி சோமசாகரம் உயிரிழந்தார். அவருடைய மரணம் இயற்கைக்கு மாறானது என மறையமுட்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பேசிய வங்கியின் செக்கரட்டரி ஜெயக்குமாரி வெவ்வேறு நேரங்களில் தனித்தனியாக ரூ. 1 லட்சத்தை வங்கி அதிகாரிகள் சோமசாகரத்திடம் கொடுத்ததாகவும், அவர்களுடன் பேசும் போது எப்போதும் சோமசாகரம் அமைதியாக இருப்பார் என்பதால் நிலைமை அவசரமானது என்பதை பற்றி அவர்கள் உணரவில்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு அவசரமாக பணம் தேவை என்பதைப் பொறுத்தே வங்கி பணத்தை வெளியிடுகிறது. தனது வீட்டை புதுப்பிக்க பணம் தேவை என்று மட்டுமே அவர்களிடம் கூறியதாகவும், ஆனால் அவர் தற்கொலை செய்யப் போவது எங்களுக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.
நீங்கள் டெபாசிட் செய்த தொகை வெளியிடப்படாமல், இது போன்ற சிக்கல்கள் வரும் போது வங்கியின் குறைதீர்க்கும் வழிமுறைகள் மூலம், உங்களுடைய குறைகள் மற்றும் புகார்களுக்கு தீர்வு காண, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உரிமை உண்டு. அப்படியும் திருப்தி அடையவில்லை என்றால் நீங்கள் நுகர்வோர் மன்றங்களுக்குச் சென்று புகார் அளிக்கலாம் என Bankbazaar.com இன் CEO ஆதில் ஷெட்டி கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications