டெல்லி : மொபைல் டவர் அதிக வாடகை கொடுப்பதாகவும், பல சலுகைகளை வழங்குவதாகவும் கூறி மோசடி செய்கிறார்கள்.
மக்கள் யாரும் இதில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இதற்கும் டிராய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் எச்சரித்துள்ளது மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், சில நிறுவனங்கள் ஏஜென்சிகள் மற்றும் தனி நபர்கள் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மோசடியில் ஈடுபடும் கும்பல்
இது குறித்து டிராய் வெளியிட்ட அறிக்கையில், சில நிறுவனங்கள் ஏஜென்சிகள் மற்றும் தனி நபர்கள் மொபைல் டவர் அமைப்பதாகவும், இதற்காக உரிமையாளர்களின் வளாகத்தில் மொபைல் டவர்களை அமைக்க, தொலைத் தொடர்பு சட்டத்தின் கீழ் தங்கள் கணக்கில் பணத்தை வரியாக டெபாசிட் செய்யுமாறு மோசடி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் நிலத்திற்கு அதிக வாடகை கொடுப்பதாகவும், பல உயர் சலுகைகலை கொடுப்பதாகவும் ஏமாற்றி வருவதாகவும் எங்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று டிராய் தெரிவித்துள்ளது.
மக்களை நம்ப வைக்க போலி சான்றிதழ்கள்
இந்த நிறுவனங்காள் அல்லது ஏஜென்சிகள், தனி நபர்கள் பணம் சேகரித்த பின்னர், அவர்களை நாம் அணுக முடியாது. மேலும் அவர்கள் மக்களை நம்ப வைக்க தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தினால் வழங்கப்பட்டாதாகக் கூறப்படும் போலி ஆட்சேபனை சான்றிதழ்களையும் (No Objection Certificates) அல்லது மொபைல் டவர் அமைக்க (Permissions) அனுமதிகளையும் வழங்குகிறார்கள் என்றும் டிராய் தெரிவித்துள்ளது.
டிராய்க்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை
இது தவிர இந்த மொபைல் டவரை அமைக்க வளாகத்தை குத்தகைக்கு விடுவதற்கு எந்தவொரு வரி அல்லது கட்டணத்தையும் வசூலிப்பதில் அல்லது ஆட்சேபனை சான்றிதழும் வழங்குவதாகவும், இதில் தாங்கள் எந்த வகையிலும் மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ ஈடுபடவில்லை என்றும் கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.
இழப்புகளுக்கு டிராய் பொறுப்பாகாது
இப்படி யாரேனும் அத்தகைய நிறுவனங்களுடனோ அல்லது ஏஜென்சிகளுடனோ, தனி நபர்களுடனோ ஒப்பந்தங்களில் ஈடுபட்டாலோ அல்லது இதன் மூலம் அவர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எவரும், அவர்களது சொந்த ஆபத்தில் அவர்களே ஈடுப்பட்டுள்ளனர் என்றும், இது சம்பந்தமான எந்தவொரு உரிமைக் கோரலுக்கும் அல்லது இழப்புக்கும், சேதங்களுக்கும் டிராய் பெறுப்பேற்காது என்றும் டிராய் எச்சரித்துள்ளது.
டவர்கள் அமைக்க திட்டம்
மொபைல் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதனை சமாளிக்க தொலைத் தொடர்பு ஆப்பரேட்டர்கள் தங்கள் பிணை மூலம் வலிமையை அதிகரித்து வருகின்றனர் என்று டிராய் கூறியுள்ளது. இந்த நிலையில் கடந்த 2019 - 2020ம் நிதியாண்டில் கிராமப்புறங்களில் மொபைல் சேவைகளுக்காக 57,559 கோபுரங்களை நிறுவுவதாக தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications