முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்குவதில் தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ரிலையன்ஸ் ஜியோ ,ஏர்டெல், வோடபோன் ஐடியா என இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் தனியார் நிறுவனங்களும் நான்காவது இடத்தில் அரசுக்கு சொந்தமான bsnl நிறுவனமும் இடம் பிடித்துள்ளன.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களை கொண்டு இயங்கக்கூடிய நிறுவனமாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து தன்னை தக்க வைத்து கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 500 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுடம் செயல்படக்கூடிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு இந்தியாவின் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

மிண்ட் தளம் வெளியிட்டுள்ள செய்தியின் படி சில ரீசார்ஜ் திட்டங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளிப்படை தன்மை விதிமுறைகளை மீறுவதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் டிராய் கண்டறிந்துள்ளதாம். அதனை மாற்றி அமைக்கும்படி தொலை தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் இதனை முடிக்க வேண்டும் என டிராய் தன்னுடைய உத்தரவில் தெரிவித்து இருக்கிறதாம்.

Also Read

அதாவது அனைத்து தளங்களிலும் கட்டணத் திட்டங்கள் சீராக வெளியிடப்படுவது உறுதி செய்வது மற்றும் டிவைஸ் எனப்படும் சாதனம் சார்ந்த கட்டுப்பாடுகளை நீக்குதல் என இரண்டு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறதாம். ஜியோ நிறுவனம் இதற்கு பதில் அளித்து இருக்கிறது. ஒழுங்குமுறை ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் தங்களுடைய நிறுவனம் தொடர்ந்து முறையாக பின்பற்றி வருவதாக தெரிவித்து இருக்கிறது. தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்கள் பாகுபாடு காட்டுவதாக கருது விட முடியாது என்று தெரிவித்து இருக்கிறதாம்.

ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் எண்ட்ரி லெவல் ப்ரீபெய்டு திட்டங்களை திடீரென நிறுத்தியது. குறிப்பிட்ட சில ரீடைல் ஸ்டோர்களில் செய்யப்படக்கூடிய ரீசார்ஜ்களுக்கு மட்டுமே இந்த திட்டம் கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டது. இதனை அடுத்து டிராய் தரப்பில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது, 249 ரூபாய் மற்றும் 199 ரூபாய் மதிப்பு கொண்ட ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்கள் ஜியோ ஸ்டோர்களில் மட்டுமே கிடைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Recommended For You

ஒரு குறிப்பிட்ட திட்டங்களை குறிப்பிட்ட வழியாக மட்டுமே பெற வேண்டும் என்பது வெளிப்படை தன்மை அற்றது, பாகுபாடு கொண்டது என டிராய் குறிப்பிட்டிருக்கிறது. அனைத்து பிளாட்பார்ம்களிலும் வாடிக்கையாளர்கள் அணுகக் கூடிய வகையில் தான் ரீசார்ஜ் கட்டணங்களும் திட்டங்களும் இருக்க வேண்டும் என கூறி இருக்கிறது. மேலும் ஜியோ பாரத், ஜியோ போன்களுக்கு என பிரத்தியேக ரீசார்ஜ் திட்டங்களை அறிவிப்பது பாகுபாடு கொண்டது என டிராய் தெரிவித்துள்ளது.

அனைத்து பிளாட்பார்ம்களிலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியான ரீசார்ஜ் திட்டங்களை அணுகும் வாய்ப்பை தர வேண்டும் என தெரிவித்திருக்கிறது. ஆனால் ஜியோ நிறுவனம் சில குறிப்பிட்ட முதல் முறை ரீசார்ஜ் மற்றும் போஸ்ட்பெய்டு பிளான் திட்டங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முடியாது அது கடைகள் வழியாக மட்டுமே கிடைக்கும் , அதே போல சில குறிப்பிட்ட சாதனங்கள் அடிப்படையிலான திட்டங்கள் குறிப்பிட்ட பயனாளர்களுக்கு என வடிவமைக்கப்பட்டது என்பதால் இது பாகுபாடு என்ற பிரிவில் வராது என தெரிவித்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+