ஏர்டெல், வொடபோன், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு ரூ.35 கோடி அபராதம்.. டிராய் அதிரடி..ஏன்..!

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வொடபோன் ஐடியா, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் உள்ளிட்ட பல தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 35 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இந்த லிஸ்டில் வீடியோகான், குவாட்ரண்ட் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும்.

இதில் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களும் அடங்கும். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தான் அதிகளவில் 30.1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

202 மில்லியன் ஜாக்பாட் காத்திருக்கு.. அமெரிக்காவின் பவர்பால் ஜாக்பாட்டை விளையாடுங்கள்

எதற்காக இந்த அபராதம்?

எதற்காக இந்த அபராதம்?

அதெல்லாம் சரி எதற்காக இந்த அபராதம், மற்ற நிறுவனங்களுக்கெல்லாம் எவ்வளவு அபராதம் விதிகப்பட்டுள்ளது வாருங்கள் பார்க்கலாம். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நினைவூட்டல்கள் கொடுத்தபோதிலும், டிர்சாயின் அறிவிப்புக்கு எந்த பதிலும் அளிக்காத நிலையில் தான், தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டாளரான டிராய் இந்த அபராதத்தினை விதித்துள்ளது.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் அபராதம்

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் அபராதம்

வீ என்ற வொடபோன் ஐடியாவுக்கு 1.82 கோடி ரூபாயும், இதே குவாட்ரண்ட் நிறுவனத்திற்கு 1.41 கோடி ரூபாய் அபராதமும், இதே ஏர்டெல்லிற்கு 1.33 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையானது ஸ்பேம் அழைப்புகள் மற்றும் போலி மெசேஜ்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்

உயர் நீதிமன்றம்

கடந்த செப்டம்பர் மாதத்தில் தொலைத்தொடர் நிறுவனங்களை எச்சரித்த டெல்லி உயர் நீதி மன்றம், இது தொடர்பாக டிராய் நேரடியாக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது. 2020 ஏப்ரல் - ஜூன் வரையில் யுசிசி- ஐ தடுக்காதற்காக தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 34,000 ரூபாய் முதல் 30 கோடி ரூபாய் வரையில் டிராய் அபராதம் விதித்துள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பேடிஎம் என்ன சொல்கிறது?

பேடிஎம் என்ன சொல்கிறது?

பேடிஎம் நிறுவனம் அதன் அட்வகேட் கருணா நந்தி மூலம் தாக்கல் செய்த மனுவில். மொபைல் நெட்வொர்க்குகள் மூலம் தகவல்கள் ((phishing)) திருடப்படுகின்றன. இதன் மூலம் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தடுக்க தவறியுள்ளன. இதன் மூலம் பேடிஎம்முக்கு நிதி இழப்பு மற்றும் நற்பெயரை கெடுத்துள்ளதாகவும், இந்த இழப்பீடுகளுக்கு அவர்களிடமிருந்து 100 கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும் என்றும் கோரியிருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+