ஒவ்வொருவரும் பல்வேறு மொபைல் நெட்வோர்க்குகளை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில், டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு வகையில் சம்பாதித்து வருகின்றன. அண்மையில் ஏர்டெல், ஜியோ போன்ற பெரிய டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்கள உயர்த்தின. எனவே பலரும் அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் பக்கம் சாய்ந்தன.
சமீபத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை 20-25 சதவீதம் வரை உயர்த்தியது அனைவரும் அறிந்ததே. கட்டண உயர்வுக்குப் பிறகு இந்தியாவில் டெலிகாம் ஆபரேட்டர்களின் மொத்த வருவாய் கடுமையாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இன் அறிக்கையின்படி, 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 10.5 சதவீதம் அதிகரித்து ரூ.91,426 கோடியாக உயர்ந்துள்ளது.

அரசு வரிகள் தவிர்த்து சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 13.11 சதவீதம் அதிகரித்து ரூ.75,310 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.66,583 கோடியாக இருந்தது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் வெளியிட்ட காலாண்டு செயல்திறன் அறிக்கையில் இவை வெளிவந்துள்ளன.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் 14.19 சதவீதம் அதிகரித்து ரூ.27,652.68 கோடியாக உள்ளது. அதே நேரத்தில், போட்டியாளரான சுனில் மிட்டலின் பார்தி ஏர்டெல்லின் ஏஜிஆர் இதே காலகட்டத்தில் 24.15 சதவீதம் உயர்ந்துள்ளது. கடைசியாக ஜூலை 2024 இல் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்தன. அப்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மொபைல் சேவை கட்டணத்தை 11-25 சதவீதம் வரை உயர்த்தின. கட்டண உயர்வைத் தொடர்ந்து ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (ARPU) அதிகரித்துள்ளது.
கட்டண உயர்வால் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லில் சேர்ந்தனர். நுகர்வோர்கள் சரிந்தாலும் தனியார் நிறுவனங்களின் வருவாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அறிக்கையின்படி, மொபைல் சேவைகளுக்கான மாதாந்திர APRU ஜூன் காலாண்டில் ரூ.157.45 லிருந்து செப்டம்பர் காலாண்டில் 9.60 சதவீதம் அதிகரித்து ரூ.172.57 ஆக உள்ளது.
இந்த கட்டணத்தை உடனடியாக ரூ.200 ஆகவும், விரைவில் ரூ.300 ஆகவும் உயர்த்த தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அப்படியானால், அடுத்த கட்டண உயர்வை உடனடியாக எதிர்பார்க்க வேண்டும். மொபைல் சேவைகளுக்கான மாதாந்திர ARPU காலாண்டில் 15.31 சதவீதம் அதிகரித்துள்ளது. வோடபோன் ஐடியாவின் ஏஜிஆர் 4.39 சதவீதம் அதிகரித்து ரூ.7,507.65 கோடியிலிருந்து ரூ.7,836.98 கோடியாக உள்ளது. அதேசமயம், பிஎஸ்என்எல்லின் ஏஜிஆர் 1.54 சதவீதம் அதிகரித்து ரூ.1,996.77 கோடியாக உள்ளது.
மொபைல் போன் சேவைகளில் ஆதிக்கம் செலுத்தும் ப்ரீபெய்டு இணைப்புகளுக்கான ARPU காலாண்டுக்கு ரூ.171 ஆக இருந்தது. செப்டம்பர் காலாண்டில் போஸ்ட்பெய்டு பிரிவின் ARPU ரூ.190.67 ஆக இருந்தது. இதற்கிடையில், தனியார் மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூன் காலாண்டில் 117 கோடியிலிருந்து 2024 ஜூலை-செப்டம்பர் மாதத்தில் 1.68 கோடி குறைந்து 115.37 கோடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications