தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்துவிட்டால் ரயிலில் ரிசர்வ் செய்து செல்லும் பயணிகள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி சொல்லி மாளாது. ரிசர்வ் செய்த இடத்தில் ஒரு பெரிய கூட்டமே வந்து ஆக்கிரமித்துக் கொள்ளும்.
தென்னிந்தியாவில் இது சற்று குறைவு என்றாலும் வடஇந்தியாவில் அநியாயத்துக்கு மோசம், யாரையும் எந்த அதிகாரிகளும் கட்டுப்படுத்தவே முடியாது. இந்த ஆக்கிரமிப்பு ஒரு பக்கம் என்றால் ரயில்கள் எதுவுமே நேரக்குக்கு வராது, பல மணிநேரம் கழித்து சாவகாசமாக வந்து சேரும். போய்ச் சேரும் ஊருக்கும் ரொம்ப லேட்டாகவே போகும்.

நாடுமுழுவதும் புதன்கிழமையன்று நிலவிய மூடுபனி காரணமாக டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தால் நிறைய நீண்டதூர ரயில்கள் குறைந்தபட்சம் ஆறு மணிநேரமாவது தாமதமாக வந்தடைந்தன. இதனால் பல ரயில்கள் தாமதமாக வந்தது மட்டுமல்லாமல் பல ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டன.
இதன் மூலம் பயணிகள் மிகுந்த சிரமத்தை அடைந்தனர், பணம் இருந்தவர்கள் வேறு வழிகளில் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். மற்றவர்கள் ரயில் நிலையத்திலேயே தங்கியிருந்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் கான்பூரை சேர்ந்த ஒரு பயணிக்கு ஏற்பட்ட சம்பவம் உண்மையிலேயே சோகமானது.

அவரது ரயில் கான்பூருக்கு மதியம் 1.15க்கு வரவேண்டும். ஆனால் ரயிலோ 9 மணிநேரம் தாமதமாக வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலைப் பிடித்து அவர் ஜான்சி நிலையத்தில் 8.15க்கு ராஜ்தானி ரயிலில் ஏற வேண்டும். மதியம் 2 மணி போல் நிலைமையை உணர்ந்த அந்த பயணி வேறு வழியில்லாமல் ஒரு ஓலா வாகனத்தைப் பிடித்து ஜான்சிக்குக் கிளம்பிச் சென்றார். கன்பர்ம்டு தட்கால் டிக்கெட் வைத்திருந்தும் அது வீணானது. ஓலா வாகனச் செலவு ரூ.4500, டிக்கெட் கட்டணம் ரூ.1500.
மொத்தம் ரூ.6000 அவருக்கு நஷ்டம்.


Click it and Unblock the Notifications