நம் நாட்டில் பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு போக்குவரத்து முறை தான் ரயில் போக்குவரத்து. குறைந்த கட்டணத்தில் சௌகரியமான பயணம் மேற்கொள்ள முடியும் என்பது தான் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
நாம் ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். திடீரென நம்முடைய பயணத்திட்டம் ரத்தாகிறது என்றால் நாம் அந்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். இவ்வாறு டிக்கெட்டை ரத்து செய்யும்போது அதற்கு குறிப்பிட்ட அளவு பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. சில சமயங்களில் நமக்கு அந்த டிக்கெட் பணமே கிடைக்காமலும் போய்விடுகிறது. இந்த சூழலில் தான் பயணிகளின் சௌகரியத்துக்காக இந்திய ரயில்வே ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அது என்ன என்பதை நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

ஏற்கனவே முன்பதிவு செய்த செய்து கன்ஃபார்ம் ஆன ரயில் டிக்கெட்டை மக்கள் ரத்து செய்யாமல் பயண தேதியை மாற்றக்கூடிய ஒரு வாய்ப்பினை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. வழக்கமாக நாம் ஒரு இடத்திற்கு செல்வதற்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டோம். திடீரென நம்முடைய பயணம் ரத்தாகிறது என்றால் பயண நேரத்திற்கு 48 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் நாம் செலுத்திய கட்டணத்தில் 25 சதவீதத்தை பிடித்து மீதமுள்ள தொகை தான் வழங்குவார்கள். அதே போல 12 முதல் 4 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50% முதல் 70% வரை பணத்தை பிடித்து தான் வழங்குவார்கள்.
சில சமயங்களில் ரிசர்வேஷன் பட்டியல் தயாரிக்கப்பட்டு விட்டால் நாம் செலுத்திய டிக்கெட் கட்டணம் நமக்கு கிடையாது. நாம் தண்டத்துக்கு அந்த பணத்தை இழந்துவிட்டு மீண்டும் புதிதாக டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். தற்போது பல்வேறு தனியார் செயலிகளும் பேருந்து உள்ளிட்ட முன்பதிவு சேவைகளை வழங்குகின்றன இவற்றில் எல்லாம் டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயண தேதியை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

இதே போன்ற ஒரு வாய்ப்பினை இந்திய ரயில்வேயிலும் கொண்டு வர வேண்டும் என பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர் . இந்த சூழலில் தான் மத்திய ரயில்வே துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் வரும் ஜனவரி மாதம் முதல் ரயில் பயணிகள் ஆன்லைனில் தங்களுடைய டிக்கெட் ரத்து செய்யாமல் பயண தேதியை மாற்றிக்கொள்ளும் வசதி கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார் .
இதற்கு கூடுதலாக எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என அவர் கூறியிருக்கிறார். இதன்படி ஒரு இடத்திற்கு ரயிலில் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து விட்டீர்கள் திடீரென உங்களுடைய உங்களால் அந்த தேதியில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் ஆன்லைனில் நீங்கள் முன் பதிவு செய்த டிக்கெட்டை ஓபன் செய்து பயண தேதியை மாற்றிக் கொள்ளலாம் .
பயண தேதியை மாற்றி கொள்ளும் வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு முறைகளில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பயண தேதியை மாற்றும் போது அந்த டிக்கெட் விலை கூடுதலாக இருந்தால் அந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications