சாமானிய மக்களுக்கு குறைந்த செலவில் நீண்ட தூர பயணங்களை சாத்தியமாக்கியது ரயில் போக்குவரத்து என்றால் அதற்கு யாரும் மாற்று கருத்து இருக்காது. கார், பஸ் போன்ற வாகனங்களில் பயணிப்பதை காட்டிலும் அதிக பாதுகாப்பு, செலவு குறைவு, டாய்லெட் உள்ளிட்ட வசதிகள் மற்றும் குறித்த நேரத்தில் சேருமிடத்தில் இறங்கலாம் போன்ற நன்மைகள் இருப்பதால் மக்கள் ரயில்களில் பயணிக்க விரும்புகின்றனர்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் ரயில் பயணத்துக்காக தேவை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தேசிய போக்குவரத்து நிறுவனமான இந்தியன் ரயில்வே, காத்திருப்போர் பட்டியலை பூஜ்யமாக குறைக்க மற்றும் ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், அடுத்த சில ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புக்கு புதிய ரயில்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாக கூறியதாவது: 2023-24ம் நிதியாண்டுக்கு ரயில்வேக்கு மூலதன செலவுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2.4 லட்சம் கோடியில் 70 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது.
இந்த பெரும் நிதி தொகையில் பழமையான ரயில்களை புதிதாக மாற்றுவதே முக்கிய இலக்காகும். அதற்காக 7,000-8,000 புதிய ரயில் பெட்டிகள் தேவைப்படும். அதற்கான டெண்டர்கள் அடுத்த 4-5 ஆண்டுகளில் வெளியிடப்படும். இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ரயில் கொள்முதல் டெண்டர்கள் மேற்கொள்ளப்படும். பழைய ரயில்களை மாற்றுவதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இது சிறப்பிக்கப்படும்.
இந்த நடவடிக்கையானது ரயில்வேயின் பெரிய மேம்படுத்தலின் ஒரு பகுதியாகும். இது பாதைகளை விடுவிப்பது மற்றும் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் பயணிகள் மற்றும் சரக்கு பொருட்களுக்கு அதிக ரயில்களை கிடைக்க செய்கிறது. தற்போதைய பொருளாதார வளர்ச்சியை ஏற்ப 2030ம் ஆண்டுக்குள் ரயில்வேயில் சுமார் ரூ.12 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும்.
இந்தியன் ரயில்வே தற்போது தினமும் 10,754 ரயில் பயணங்களை இயக்கி வருகிறது. கோவிட்-19க்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுட்டால் தற்போது ரயில்வே கூடுதலாக 568 ரயில் பயணங்களை இயக்கி வருகிறது. மேலும் காத்திருப்போர் பட்டியலை பூஜ்ஜியமாக குறைக்க மேலும் 3,000 ரயில் பயணங்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தற்போது இயக்கப்படும் ரயில் பயணங்கள், ஒவ்வொரு ஆண்டும் 700 கோடி பயணிகளை கொண்டு செல்ல ரயில்வே உதவுகிறது. இது 20230ம் ஆண்டுக்குள் 1,000 கோடியாக உயரும். பயணிகள் பிரிவில் காத்திருப்போர் பட்டியல் பிரச்சினைக்கு தீர்வு காண பயணங்களின் எண்ணிக்கையில் 30 சதவீதம் அதிகரிப்பு இருக்க வேண்டும்.
திட்டமிட்டப்படி ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பு நிதியாண்டில் 5,500 முதல் 6,000 கி.மீட்டர் புதிய பாதைகளுடன் நிறைவு செய்வோம் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது ஒரு நாளைக்கு 16 கி.மீட்டர் ரயில் பாதை போடப்பட்டுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் 5,243 கி.மீட்டர் பாதைகள் ( நாள் ஒன்றுக்கு 14 கி.மீ.) அமைக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications