இந்தியா போன்ற நாடுகளில் ட்ரைனிங் ரயிலில் பயணம் செய்வது வசதியான போக்குவரத்து முறையாக உள்ளது. அதிக அளவிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை தேர்வு செய்வதற்கு மற்றொரு முக்கிய காரணம் குறைந்த டிக்கெட் கட்டணமாகும். பேருந்து கட்டணத்தோடு ஒப்பிடுகையில் ரயில் பயணங்களுக்கு டிக்கெட் கட்டணம் குறைவுதான். அதோடு ரயில் பெட்டிகளில் படுக்கை வசதிகள் மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இதில் அப்பர் பெர்த், மிடில் பெர்த் மற்றும் லோயர் பெர்த் என 3 பர்த்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மிடில் பெர்த்தை பயன்படுத்துவதற்கு சில விதிகளும் உள்ளன.
மிடில் பெர்த் விதி: மிடில் பெர்த் என்பது லோயர் பெர்த் மற்றும் அப்பர் பெர்த்த்துக்கு இடையில் உள்ளது. ஆனால் பயணிகளுக்கு லோயர் பெர்த்தில் அமர்வதற்காக பகல் நேரங்களில் இந்த இருக்கை மடிக்கப்பட்டு இருக்கும். இந்த இரண்டு செயல்பாட்டின் காரணமாக மிடில் பெர்த்தில் பயணிக்கும் பயணிகள் சில விஷயங்களை செய்து தான் ஆக வேண்டும். இந்திய ரயில்வே இதற்கு ஒரு காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளது. பயணிப்பவர்கள் தூங்குவதற்காக தங்கள் பெர்த்தை இரவு 10 மணி தொடங்கி மறுநாள் காலை 6:00 மணி வரையில் ஸ்லீப்பிங் பொசிஷனில் வைத்திருக்கலாம். ஆனால் அதன் பிறகு வைத்திருக்கக் கூடாது.

தூங்கும் நேரம் முடிவடைந்ததும் பயணிகள் மிடில் பெர்த்தை அதன் நிமிர்ந்த நிலைக்கு மடித்து வைக்க வேண்டும். பகல் நேரங்களில் மிடில் பெர்த்தை சரியான பொசிஷனல் வைத்திருப்பது விதிகளுக்கு உட்பட்டதாக கருதப்படுகிறது. அதுவே நீங்கள் குடும்பத்துடன் பயணிக்கிறீர்கள் என்றால் எந்த பிரச்சினையும் இல்லை. உங்களுக்குள் பேசி நீங்கள் பகல் நேரங்களிலும் மிடில் பெர்த்தை மடித்து வைத்துக் கொள்ளலாம் அல்லது மடிக்காமலும் பயணிக்கலாம். ஆனால் பிறருடன் பயணிக்கையில் இது போன்ற விதிகளுக்கு இணங்குவது முக்கியம்.
பொழுது விடிந்து 6 மணிக்கு பிறகு மிடில் பெர்த்தை மடிக்க மறுத்தால் பிற பயணிகள் அசௌகரியம் குறித்து தெரிவிக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் பேச்சை மதிக்கவில்லை என்றால்.. ரயில் ஊழியர்கள் அல்லது டிக்கெட் செக்கரிடம் புகார் அளிக்கலாம்.
பயணிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பிற விதிகள்: பயணத்தின் போது பிற விதிகளையும் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளன. இந்த விதியை மீறுவது அபராதத்திற்கு உட்பட்டதாகும். அதோடு உங்கள் மேல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் வழி வகுக்கலாம்.
மேலும் ரயிலில் பயணிப்பவர்கள் தங்களுடைய லக்கேஜ்-களை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். இடையில் உள்ள வழிகள் அல்லது தூங்கும் பகுதிகளை தடுத்து லக்கேஜ்களை வைக்கக்கூடாது. இரவு 10 மணிக்கு பிறகு அதிக ஒளியுள்ள விளக்குகள், சத்தத்துடன் மொபைல் போன் பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பயணியும் கண்டிப்பாக தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் அல்லது சீட்களில் மட்டுமே அமர வேண்டும். ஒருவேளை சீட்களை மாற்றி அமைத்தாலும் அது பரஸ்பர ஒப்புதல் உடன் மட்டுமே செய்யப்பட வேண்டும். பயணிகள் கண்டிப்பாக குப்பைகளை குப்பை தொட்டிகளில் தான் அப்புறப்படுத்த வேண்டும்.
அதேபோல அவசரகால சங்கிலியை இழுப்பது சில எதிர்ப்பாராத மருத்துவ நிலைகள் அல்லது ஆபத்துகள் போன்ற உண்மையான அவசர நிலைகளின் போது மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவறாக பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications