இந்திய ரயில்வே பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வே மூலம் பயணம் செய்கின்றனர். ரயில் பயணங்களை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று அதன் குறைந்த டிக்கெட் கட்டணம். இந்த ரயில்களில் பல்வேறு வகையான பெட்டிகள் உள்ளன.
மக்கள் தங்கள் பயணத்திற்கு ஏற்ற பெட்டியைத் தேர்வு செய்யலாம். அப்படி பயணம் செய்யும்போது தங்கள் தேவைக்கு அதிகமான சாமான்களை எடுத்துச் செல்வது வழக்கமான காட்சியாக உள்ளது. ஆனால் அப்படி எடுத்துச் செல்லக்கூடாது. ரயிலில் சாமான்களை ஏற்றுவதற்கும் சில குறிப்பிட்ட விதிகள் உள்ளன. இந்த விதிகளை மீறினால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.

நீங்கள் ஃபர்ஸ்ட் கிளாஸில் பயணம் செய்தீர்களானால் அதிகபட்சமாக 70 கிலோ வரையிலான சாமான்களை எடுத்துச் சொல்லலாம். நீங்கள் செகண்ட் கிளாஸ் கோச்களில் பயணம் செய்தால் 50 கிலோ வரை மட்டுமே சாமான்களை எடுத்துச் செல்ல வேண்டும். இதனுடன் கூடுதலாக 10 கிலோ வரை எடுத்துச் செல்லலாம்.
தேர்ட் ஏசி கிளாஸில் பயணம் செய்தால், 40 கிலோ வரை சாமான்களை எடுத்துச் செல்லலாம். இது தவிர, 10 கிலோ கூடுதலாக அனுமதிக்கப்படுகிறது.
இதைத் தாண்டி நீங்கள் லகேஜ் எடுத்துச் சென்றால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். இதைத் தவிர ஸ்லீப்பர் கோச்களில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலான சாமான்களை எடுத்துச் செல்ல முடியும். கூடுதலாக 10 கிலோ வரை அனுமதிக்கப்படுகிறது.
பொதுப்பட்டிகளில் பயணம் செய்பவர்கள் 35 கிலோ வரையிலான சாமான்களை மட்டுமே எடுத்துச் செல்லலாம். இந்த வரம்பை மீறி நீங்கள் ஏற்றிச் சென்றால் TT உங்களுக்கு அபராதம் விதிக்கலாம். அபராதத் தொகை 6 மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இதைத் தவிர குடித்துவிட்டு பயணம் செய்வது, பிற பயணிகளுக்கு இடையூறாக இரவு நேரங்களில் மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட் வாசிப்பது, சத்தமாக மொபைல் போன் பயன்படுத்துவது, வெடி பொருட்களை எடுத்துச் செல்வது போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே ரயிலில் பயணிப்பவர்கள் ரயில்வே நிர்வாகம் விதித்துள்ள விதிகளை மதித்து அவற்றுக்கு இணங்க நடந்தால் தேவையின்றி அபராதம் செலுத்துவதை தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications