பிரதமர் மோடியின் முயற்சியால் தற்போது இந்தியா முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகமாகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக யுபிஐ பணப்பரிவர்த்தனையை தற்போது அதிக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யுபிஐ பணப் பரிவர்த்தனையில் இதுவரை டெபிட் கார்டுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிரெடிட் கார்டுகளுக்கும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
கிரெடிட் கார்டு
NPCI சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் ரூ.2,000 வரையிலான ரூபே கிரெடிட் கார்டு பண பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் இல்லை
2022 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கிரெடிட் யுபிஐ பண பரிவர்த்தனையில் கிரெடிட் கார்டுகள் அனுமதிக்கப்படும் என்றும், குறிப்பாக ரூபே கிரெடிட் கார்டுகள் யுபிஐ மூலம் பயன்படுத்தினால் ரூ.2,000 வரை கட்டணங்கள் இல்லை என அறிவித்துள்ளது.
ரூபே கிரெடிட் கார்டுகள்
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ரூபே கிரெடிட் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளது என்பதும் இந்த கார்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் MDR வகைக்கு ரூ.2,000 குறைவான மற்றும் அதற்கு சமமான பரிவர்த்தனை தொகைக்கு கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு பயனர்களுக்கு தரும் சலுகையாக பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி ரபிசங்கர் அவர்கள் கூறியபோது, 'கிரெடிட் கார்டுகளை யுபிஐ உடன் இணைப்பதன் அடிப்படை நோக்கம் என்னவெனில் வாடிக்கையாளருக்கு பரந்த அளவிலான பரிவர்த்தனையை வழங்குவது என்றும், தற்போது, யுபிஐ-இல் டெபிட் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இனி கிரெடிட் கார்டுகளும் இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.
பயனர்கள்
யுபிஐ பரிவர்த்தனையில் ரூபே கார்டுகளை இணைக்கும் நடவடிக்கையால் பயனர்கள் பரவலாக ரூபே கார்டுகளை ஏற்றுக்கொள்ள ஊக்கம் அளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications