எங்கு போனாலும் சரி, எந்த செய்தித்தாள், மீடியா, என எங்கெங்கிலும் ஒலிக்கும் கொரோனாவின் தாக்கத்தால், இன்று உலகமே அலண்டு போயுள்ளது. ஏனெனில் அந்தளவுக்கு மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த வகையில் இந்தியாவில் தற்போது காலடி வைத்துள்ள கொரோனாவால் 2 மரணங்களும், 100க்கும் மேற்பட்டோர் தாக்கமும் அடைந்துள்ளனர்.
சரி இந்த கொடிய வைரஸால் இந்தியாவின் எந்த துறையெல்லாம் பாதிக்கப்படபோகிறது, வாருங்கள் அதை பற்றித் தான் பார்க்கபோகிறோம்.

இந்த துறையெல்லாம் வீழ்ச்சி காணும்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால், பல நாடுகளிலும் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் குறிப்பாக போக்குவரத்து துறை, கட்டுமானம், இரசாயன உற்பத்தி என பல துறைகள் இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சீனாவும், சீனாவில் தோன்றிய மறக்க முடியா கொரோனா வைரஸூம் தான்.

இந்த துறையில் எல்லாம் பாதிப்பு ஏற்படலாம்
இது குறித்து பிசினஸ் டூடேவில் வெளியான செய்தியொன்றில், சீனாவின் வுகான் மாகாணத்தில், முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகத்தில் பல நாடுகளில் ருத்ர தாண்டவம் எடுத்து ஆடி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் பல தொழில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கட்டுமானம், இரசாயன உற்பத்தி, இயந்திர உறபத்தி, வாகன உற்பத்தி உள்ளிட்ட பல துறைகள் பாதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதிலும் பாதிப்பு தான்
எவ்வாறாயிலும் மொத்த இறக்குமதியில் 46% பங்கினைக் கொண்ட கச்சா எண்ணெய் மற்றும் கற்கள், நகைகள், போன்ற இந்தியாவின் சிறந்த இறக்குமதிகள் சீனாவில் கோவிட் -19ஆல் ஏற்படும் பொருளாதார சேதத்திலிருந்து சற்று பாதிக்கப்படலாமென்றும் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 26% இரும்பும் எஃகு மற்றும் கனிம இரசாயனங்கள் பங்கு வகிக்கின்றன.

சீனாவில் இருந்து இறக்குமதி
ஆக சீனாவில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலையால் அவை மிதமாக பாதிக்கப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரும்பு மற்றும் எஃகு மீதான தாக்கம் சற்று மிதமானதாக இருக்கலாம் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் இந்தியா தனது இரும்பு மற்றும் எஃகு இறக்குமதியில் சீனாவில் இருந்து 11% இறக்குமதி செய்கிறது.

தென் கொரியாவும் பாதிப்பு
எனினும் இரும்பு மற்றும் எஃகு மூலதன இறக்குமதி நாடான தென் கொரியா, சீனாவில் இருந்து தான் அதன் தேவையில் 20% இறக்குமதி செய்கிறது. ஆனால் தற்போது இருக்கும் நிலையில் இவ்விரு நாடுகளுமே கொரோனா தாக்கத்தினால் பாதிப்படைந்துள்ளன. ஆக நிச்சயம் இந்த துறை பாதிக்கப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கனிம ரசாயனங்கள்
இதே கனிம இரசாயனங்கள் இறக்குமதியில் 15% மட்டுமே சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. ஆக இத்துறையிலும் மிதமான தாக்கம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே இந்தியாவில் இருந்து சீனாவுக்கு மொத்த ஏற்றுமதியில் 5% மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆக கொரோனா வைரஸின் தாக்கம் அவ்வளவாக பெரிய அளவில் இருக்காது.

ஏற்றுமதியிலும் சற்று பாதிப்பு தான்
எனினும் பருத்தி, ஆர்கானிக் கெமிக்கல்ஸ், உள்ளிட்ட பல முக்கிய பொருட்கள் சீனாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆக இந்த துறைகள் சற்று பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. முதன் முதலாக சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது 110 நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில் 5,000 பேருக்கு மேல் பலி கொண்டுள்ள இந்த வைரஸினை பெரும் தொற்று நோயாக அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

சில முக்கிய பொருட்கள்
இந்த நிலையில் ஐந்து முக்கிய பொருட்களுக்காக சீனாவினை நம்பியுள்ளது சீனா. எலக்ட்ரிக் வாகன உதிரிபாகங்கள், குறிப்பாக இயந்திரங்கள், இயந்திர உபகரணங்கள், பிளாஸ்டிக், கரிம வேதிக் பொருட்கள் மற்றும் ஆப்டிகல், அறுவை சிகிச்சை கருவிகள் என அனைத்தும் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 18% ஆகும்.