கூடிய விரைவில் மினி பஸ் சேவை.. தமிழ்நாடு அரசு வழித்தடங்களை கண்டறியும் பணி தீவிரம்..!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் அடுத்த 2 முதல் 3 மாதங்களில் மினி பேருந்து சேவை தொடங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் முதன்முறையாக மினி பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டது. பின்னாளில் அந்த சேவை நிறுத்தப்பட்டது.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் மீண்டும் மினி பேருந்து சேவையை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதன்படி டிசம்பர் மாதம் முதல் மினி பேருந்து சேவைகளை தொடங்கும் பணியில் போக்குவரத்து துறை மும்மரமாக இறங்கியுள்ளது.

கூடிய விரைவில் மினி பஸ் சேவை..  தமிழ்நாடு அரசு வழித்தடங்களை கண்டறியும் பணி தீவிரம்..!

முதல்கட்டமாக மினி பேருந்து சேவைக்கான வழித்தடங்களை நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கிராமத்தில் குறைந்தது 100 குடும்பங்கள் இருந்து இதுவரை அங்கு அரசு பேருந்துகளோ அல்லது தனியார் பேருந்துகளோ இயக்கப்படாமல் இருந்தால் அங்கே மினி பேருந்து சேவைகள் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களையும் கேட்டு வருவதாக கூறியுள்ளனர்.

70 சதவீதம் பேருந்து வசதியற்ற பகுதிகளையும் 30 சதவீதம் பேருந்து வசதி இருக்கும் பகுதிகளையும் இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் உருவாக்கப்பட உள்ளது. புதிய திட்டத்தின் படி 25 கிலோ மீட்டருக்குள் இயக்குவதற்கு மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

இதில் 17 கிலோ மீட்டர் தூரம் பேருந்து சேவை இல்லாத வழித்தடமாகவும் 8 கிலோமீட்டர் பேருந்து சேவை இருக்கும் வழித்தடமாகவும் உள்ள பகுதிகளை கண்டறிந்து வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜிபிஎஸ் கருவிகள் இவற்றில் பொருத்தப்படும் என்றும் 25 இருக்கைகள் இடம் பெறும் என்றும் கூறுகின்றனர். தற்போதைய சூழலில் மினி பேருந்துகள் 20 கிலோமீட்டர் வரை மட்டுமே இயக்க வேண்டும் என்றும் அதில் 4 கிலோ மீட்டர் தூரம் ஏற்கனவே பேருந்து வசதி இருக்கும் வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. இது 25 கிலோ மீட்டர் என உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 1999 - 2000 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 6500 மினி பேருந்துகள் இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் 2977 மினி பேருந்துகள் மட்டுமே தற்போது உரிமத்தை புதுப்பித்துக் கொண்டுள்ளன இதில் 1500 பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. இதனிடையே ஏற்கனவே மினி பேருந்துகளை ஓட்டுவதற்கு உரிமம் பெற்ற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் குடியரசன் தெரிவித்துள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+