ரூ.1.5 லட்சம் கோடி என்பது பெரிய தொகை. ஆனால், இந்த தொகையை தற்போது இந்தியர்கள் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவழித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் இந்தச் செலவு 1000 மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2009-10ஆம் ஆண்டுகளில் இந்தியர்கள் அதிகமாக செலவழித்தது வெளிநாட்டில் கல்வி பெறுவதற்காக இருந்தது. கல்விக்கே அதிக முக்கியம் கொடுத்தனர். ஆனால், இப்போது, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், கல்வி உள்ளிட்ட துறைகளில் பணம் செலவழிக்கிறார்கள். ஆனால் அதைவிட அதிகமாக வெளிநாட்டு பயணங்களுக்கு செலவழித்து வருகின்றனர். இந்தப் பரிமாற்றம், இந்தியர்களின் வாழ்க்கை முறை, வருமானம், முன்னுரிமைகள் ஆகியவை எவ்வளவு மாறியுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்தியர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து வருகின்றனர். அதன்படி துருக்கி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், மொரீஷியஸ், அமெரிக்கா, பிரேசில், சீனா போன்ற நாடுகளுக்கு அதிக பயணம் செய்து வருகின்றனர். 2009இல் 1.1 கோடி பேரும், 2019 கொரோனா தொற்றுக்கு முன் 2.6 கோடி பேரும், 2020-21 கொரோனா தொற்றின்போது வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. 2022ஆம் ஆண்டில் மீண்டும் 2 கோடி இந்தியர்கள் வெளிநாடு பயணித்துள்ளனர்.
2009-10ல், இந்தியர்கள் வெளிநாட்டு பயணத்திற்காக செலவழித்தது மிகக் குறைவாக இருந்தது. ஆனால் 2024-25ஆம் ஆண்டுக்குள் இது 17 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.15 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இது வெளிநாட்டு கல்வி செலவுகளை மீறி, பயணம் என்பது இந்தியர்களின் முக்கியமான வாழ்க்கை முன்னுரிமையாக மாறிவிட்டதை காட்டுகிறது.
இந்தியர்கள் சிறந்த வாழ்க்கை, மேம்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி நோக்கில் அதிக அளவில் வெளிநாடுகளுக்குப் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், நல்ல கல்வி பெறுவதற்கான செலவுகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெற விரும்புகின்றனர். அதேசமயம், உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையில் போட்டியிடும் நோக்கிலும் இவர்கள் செல்கிறார்கள். இந்த மேம்பாடு, கல்விக்கு இந்தியர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், வெளிநாட்டு கல்வி என்பது ஒரு முதலீடு எனும் எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறது.
இந்தியர்கள் வெளிநாடுகளில் செலவழிக்கும் மொத்தத் தொகை 2024-25ஆம் ஆண்டுக்குள் 30 பில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.2.5 லட்சம் கோடி) தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவச் செலவுகள், வங்கியில் வைப்பு, மற்றும் பிற தொழில்துறைச் செலவுகள் அடங்கும். கடந்த 15 ஆண்டுகளில், இந்தியர்களின் வெளிநாட்டு செலவுகள் 983 மில்லியன் டாலரில் இருந்து 30 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளன.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications