தென்னிந்திய மாநிலங்கள் மத்தியில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் பெரும் போட்டி நிலவி வருகிறது, குறிப்பாக தமிழ்நாடு - கர்நாடகா - தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்துடன் போட்டி போட்டு நாட்டிலேயே அதிக ஜிடிபி கொண்ட மாநிலமாக உருவெடுக்க வேண்டும் பெரும் இலக்கின் முதல் கட்டமாக 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடைய வேண்டும் என்ற இலக்கை கொண்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பை முன்னிட்டு, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான தமிழ்நாடு பிரதிநிதிகள் கொண்ட குழு இந்த வாரம் செவ்வாயன்று பெங்களூருவில் விண்வெளி, பாதுகாப்பு துறைக்கான வட்டமேசை மாநாட்டை நடத்தியது.
இந்த கூட்டத்தின் முடிவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் எல் அண்ட் டி கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் அருகே விண்வெளி தொடர்பான திட்டங்களுக்கு முக்கிய பங்களிக்க ஒப்புக்கொண்டது.
இதேபோல் இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஓசூர்-ஐ என்ஜின் உற்பத்தி கிளஸ்டராக மாற்றுவது குறித்து ஆலோசனை துவங்கியுள்ளது. ஓசூர் MSME நிறுவனங்களின் கூடாரமாக இருக்கும் காரணத்தால் அனைத்து துறையின் பெரும் நிறுவனங்களுக்கும் தன்னுடைய சப்ளை செயினில் பெரும் பலமாக உள்ளது.
இந்த நிலையில் ஓசூரை இன்ஜின் உற்பத்தி தளமாக மாற்றும் யோசனையை முன் வைக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தையும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான தமிழ்நாடு பிரதிநிதிகள் கொண்ட குழு பெங்களூரில் செய்துள்ளது. இதேபோன்ற விஷயத்தை சென்னையில் கர்நாடக அமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு செய்தார்.
ஜூலை மாதம் தமிழ்நாட்டில் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்க திட்டத்தை பாக்ஸ்கான் அறிவித்த அதே நாளில் அதாவது ஜூலை 31 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மாலை கர்நாடக மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் எம்.பி பாட்டீல், ஐடி/பிடி அமைச்சர் பிரியங்கா கார்கே மற்றும் ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு ஆகியோர் முக்கியமான ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டம் நடந்த அடுத்த சில வாரத்தில் பாக்ஸ்கான் இரு புதிய தொழிற்சாலை அமைப்பதற்காக கர்நாடகாவில் சுமார் 600 மில்லியன் டாலர் அதாவது 4800 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யவுள்ளது என தகவல் வெளியானது.


Click it and Unblock the Notifications