சென்னையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டிற்கு 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டி வெற்றி பாதைக்கு அடித்தளமிட்ட நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்து வரும் உலகப் பொருளாதார மாநாட்டிற்கு (WEF) அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான தொழில் துறையினர் குழு கலந்துகொண்டு அசத்தி வருகிறது.
Davos World Economic Forum என்பது இந்தியாவில் இருந்து மட்டும் அல்லாமல் உலகளவில் இருந்து வணிகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் வருடத்திற்கு ஒருமுறை ஒன்றிணையும் முக்கியமான வர்த்தகக் கூட்டமாகும்.

இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளின் வர்த்தகத் தலைவர்கள் மத்தியில் தமிழ்நாட்டை முக்கிய முதலீட்டுத் தளமாகக் காட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 ஆம் தேதி டாவோஸ்-ல் Tamil Nadu Pavilion-ஐ தொழிற்துறை அமைச்சர் திறந்து வைத்ததில் துவங்கி 24 மணிநேரத்தில் 20 முக்கியக் கூட்டங்கள் நடந்துள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டிஆர்பி ராஜா டாவோஸ் பயணத்தில் தமிழ்நாடு பெவிலியனில் HCL டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் மற்றும் HCL டெக்னாலஜிஸ் CEO சி.விஜயகுமார் ஆகியோரை சந்தித்தார். ரோஷ்னி நாடார் மற்றும் சி.விஜயகுமார் ஆகியோரிடம் அமைச்சர், தமிழ்நாட்டில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் தங்கள் அலுவலகத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை செய்தார்.
இந்த நிலையில் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா டாவோஸ் கூட்டம் குறித்துச் சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் 3 முக்கியமான திட்டம் குறித்துப் பேசியது தான் டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டிற்கு (WEF) அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான தொழில் துறையினர் குழு கலந்துகொண்டதில் மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் பேட்டியில் அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன 3 முக்கிய விஷயங்கள்.
1. தமிழ்நாட்டுக்கு செமிகண்டக்டர் துறையில் (ஃபேப்ரிகேஷன் மற்றும் டிசைன்) விரைவில் சில குட் நியூஸ் வர உள்ளது எனத் தெரிவித்தார்.
2. தமிழ்நாட்டில் லைப் சையின்ஸ் துறையில் புதிய வர்த்தகத்தையும், முதலீட்டையும் ஈர்க்க முயற்சிகள் இந்த டாவோஸ் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்காகப் பல நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார்.
3. டாவோஸ் கூட்டத்தில் வெற்றி அடைந்த பல பேச்சுவார்த்தை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் விரைவில் கையெழுத்தாகும் எனத் தெரிவித்தார்.
அமைச்சர் டிஆர்பி ராஜா தமிழ்நாட்டுக்கு செமிகண்டக்டர் துறையில் குட் நியூஸ் அறிவிக்கும் முன்பு தான் HCL டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் மற்றும் HCL டெக்னாலஜிஸ் CEO சி.விஜயகுமார் ஆகியோரை சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் குரூப் மற்றும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி இந்தியாவில் புதிய செமிகண்டக்டர் OSAT தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.
அப்போ ஹெச்சிஎல் - பாக்ஸ்கான் OSAT தொழிற்சாலை தமிழ்நாட்டில் தானா..? அப்படித் தமிழ்நாட்டுக்கு வந்தால் எங்கு வரும்..? திருச்சி, கிருஷ்ணகிரி- தருமபுரி அல்லது வழக்கம் போல் சென்னையா..?
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications