TRB ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கொண்டாட்டம்..!!

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் TRB ராஜா, சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் அலுவலக இடங்களின் பற்றாக்குறை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் அதிகரித்து வரும் முதலீடுகளுக்கு ஏற்ற வகையில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தரமான அலுவலக இடங்களை உருவாக்க முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் பெரிய அளவிலான ஏ-கிரேடு வணிக இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தமிழகம் ஈர்த்து வரும் முதலீடுகளின் வேகத்திற்கு ஏற்ப, இன்னும் அதிக அளவிலான அலுவலக இடங்கள் தேவைப்படுகிறது என்று அமைச்சர் ராஜா தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். எனவே, பெரிய வணிக கட்டுமான நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உயர்தர ஏ-கிரேடு உள்கட்டமைப்பில் விரைவாக முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

TRB ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கொண்டாட்டம்..!!

2023 ஆம் ஆண்டில் சென்னையில் மட்டும் சுமார் 9.6 மில்லியன் சதுர அடி அலுவலக இடங்களை நிறுவனங்கள் பயன்பாட்டிற்கு எடுத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 31% அதிகம். ஐடி, ஐடி - பிபிஎம் (IT-BPM), வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) மற்றும் co-working spaces போன்ற துறைகளின் அதிரடியான வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணமாகும் என டிஆர்பி ராஜா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதில் குறிப்பாக, கோ வொர்கிங் ஸ்பைஸ் பங்கீடு 2022 இல் 12% ஆக இருந்தது, 2023 இல் கிட்டத்தட்ட 20% ஆக அதிகரித்துள்ளது. 2026 ஆம் ஆண்டளவில், சென்னையில் அலுவலக இடங்களின் மொத்த அளவு 100 மில்லியன் சதுர அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மட்டுமல்லாமல், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, ஓசூர், தூத்துக்குடி போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் அலுவலக இடங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த நகரங்களிலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா ரியல் எஸ்டேட் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் பல லட்சம் சதுர அடி அலுவலக இடங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மதுரை மற்றும் திருச்சியிலும் அதிக அளவிலான அலுவலக இடங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்று ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு, இரண்டாம் நிலை நகரங்களில் TIDEL Neo பூங்காக்கள் மூலம் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. மேலும் பல இடங்களில் புதிய நியோ டைடல் பார்க் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. எனவே, தனியார் துறையும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முன்வந்து, தரமான அலுவலக இடங்களை உருவாக்க வேண்டும் என்று டிஆர்பி ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+