தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாத இறுதியில் தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்களை அதாவது நியோ டைடல் பார்க் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ. 30.50 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த ஐடி பார்க், தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வெறும் ஒரு மாதத்திற்குள் மொத்த அலுவலக இடமும் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் நியோ TIDEL பார்க் முழுமையாக நிரம்பியுள்ளதாகத் தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகம் துறை அமைச்சர் TRB ராஜா அவர்கள் அறிவித்துள்ளார். நியோ டைடல் பார்க் திறந்து ஒரு மாதம் கூட முழுமையாக முடியாத நிலையில் 100% Occupancy நிலையை தொட்டது புதிய மைல்கல்.
மேலும் தஞ்சாவூர் பகுதியில் தொழில்துறை வளர்ச்சி அதிகரித்து வருவதையும், மாவட்டத்தில் புதிய முதலீடுகளைக் கவரவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் சிறந்து விளங்குவதையும் இந்த 100% Occupancy நிலையைக் காட்டுகிறது.
அமைச்சர் டிஆர்பிஐ ராஜா இன்று நியோ டைடல் பார்கில் ஹாம்லி பிசினஸ் சொல்யூஷன்ஸ் (Hamly Business Solutions) அலுவலகத்தை திறந்து வைத்தார், தஞ்சாவூரின் தொழில்துறை வளர்ச்சிக்கு தான் ஒரு சிறிய பங்களிக்க முடிந்ததில் பெருமை அடைந்ததாக தெரிவித்தார்.
டைடல் பார்க்கில் அலுவலக இடத்திற்கான தேவை அதிகரித்து வருவதையும், பகுதியின் வளர்ந்து வரும் ஐடி தேவைகளை பூர்த்தி செய்ய நியோ TIDEL இரண்டாம் கட்டத்திற்கான திட்டங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் விரைவில், தஞ்சாவூர் நியோ டைடல் பார்க்கின் அடுத்தகட்ட விரிவாக்கப்பணி கள் துவங்கும் என நம்பப்படுகிறது.
இதுக்குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா தனது டிவிட்டர் கணக்கில் செய்த பதவில், தஞ்சாவூர் நியோ TIDEL பார்க்கில் புதிதாக நிறுவப்பட்ட ஹாம்லி பிசினஸ் சொல்யூஷன்ஸ் அலுவலகத்தை இன்று நான் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்! ஒரு டெல்டாக்காரன் என்ற வகையில் இது எனக்கு ஒரு சிறப்பு சந்தர்ப்பமாகும்!
தஞ்சாவூர் நியோ TIDEL பார்க் இப்போது 100% நிரம்பியுள்ளது!
அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய நியோ TIDEL இரண்டாம் கட்டத்திற்கான திட்டங்களை நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்!
தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை நோக்கி நம்மை முதல்வர் முக.ஸ்டாலின் ஊக்குவித்து வரும் வேளையில், அவரது கனவுகளை நிறைவேற்றும் வகையில் நிறுவனங்களை கவரவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றம். இந்த நிலையில் தஞ்சாவூர் நியோ TIDEL பார்க் இப்போது 100% நிரம்பியுள்ளது தஞ்சாவூரின் தொழில்துறை வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல் ஆகும்.


Click it and Unblock the Notifications