சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தென்னிந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களின் 2023 ஆம் நிதியாண்டில் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வுகள் அடிப்படையில் GSDP தரவுகள் வெளியிடப்பட்டது.
2023 ஆம் நிதியாண்டின் முடிவில் 24.8 லட்சம் கோடி ரூபாய் GSDP உடன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து தான் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா பிரதேசம், கேரளா ஆகியவை இருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவைற்றை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தின் அடிப்படையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இன்று நடந்த அமைச்சரவையில் 5 பேரின் துறை மாற்றப்பட்டு உள்ளது, இதில் 3 பேருக்கு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு உள்ளது.
தமிழ்நாட்டின் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், நிறுவனங்களை ஈர்க்கவும், வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொழிற்துறை கொள்கை அளவில் பல முக்கியமான மாற்றங்களை செய்ய கட்டாயம் இருக்கும் முக்கியமான தொழிற்துறை அமைச்சராக தமிழ்நாட்டு அமைச்சரவையில் முதல் முறையாக இணைந்துள்ள டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
டி.ஆர்.பி.ராஜா தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தொழிற்துறை அமைச்சகம் இதற்கு முன்பு தங்கம் தென்னரசு அவர்களிடம் இருந்து. தங்கம் தென்னரசு நிர்வாகத்தில் பல முதலீடுகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஈர்க்கப்பட்டு தமிழ்நாட்டில் பல ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தவர்.

இவருடைய பணியை தொடர்ந்து மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் பயணத்தை தொழிற்துறை அமைச்சகராக டி.ஆர்.பி.ராஜா வேகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் அமேசான் முதல் பல வெளிநாட்டு நிறுவனங்களையும், முதலீடுகளையும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்த பெறுமை தங்கம் தென்னரசு-க்கு உண்டு. இவருடைய பணியை பலமுறை முதல்வர் வெளிப்படையாகவே பாராட்டியுள்ளார், அடுத்த முதலீட்டு மாநாட்டிற்காக தயாராகியிருக்கும் வேளையில் தங்கம் தென்னரசு அவர்களின் அமைச்சரவை மாற்றப்பட்டு உள்ளது.
தொழிற்துறை அமைச்சகராக இருந்த தங்கம் தென்னரசு இன்று முதல் நிதியமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதனுடன் கூடுதலாக மனிதவள பிரிவும் இவரின் நிர்வாகத்திற்கு கீழ் வருவதால் நிதி, நிதியியல் திட்டமிடல், மனித வள மேம்பாடு, ஓய்வூதியம், ஓய்வூதிய நலன்கள், புள்ளியியல், தொல்லியல் துறை ஆகியவை பொறுப்புகள் இவரின் கைக்கு வருகிறது.
மூன்றாவதாக நிதியமைச்சகம் மற்றும் மனிதவள துறையின் அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், இத்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறையின் அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.

கொள்கை அளவில் ஸ்டார்ட்அப், பின்டெக் என பல முக்கியமான விஷயத்தில் அசத்திய முன்னாள் நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் ஐடி துறைக்கு மாற்றியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு ஐடி துறைக்கும், டெக் முதலீட்டு துறைக்கும் பொற்காலம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தொழிற்துறை அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா, நிதியமைச்சகம் மற்றும் மனிதவள துறை அமைச்சராக தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டு உள்ளதன் மூலம் அடுத்த 2 வருடத்தில் பெரும் மாற்றத்தை பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications