இந்திய மக்கள் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகத்தில் இருக்கும் வேளையில், தொழிற்துறையும் அதை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், இந்திய மக்களின் முக்கிய போக்குவரத்து வாகனமாக இருக்கும் இருசக்கர வாகனங்களின் தயாரிப்பில் ஏற்கனவே கொடிக்கட்டி பறக்கும் தமிழ்நாட்டுக்கு அடுத்த மகுடம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொத்த எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் சுமார் 68 சதவீதம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது என தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய உற்பத்தி துறையில் முக்கிய இடத்தை தக்கவைத்திருக்கும் தமிழ்நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியில் தனக்கென தனி இடத்தை பெற்று இருக்கும் வேளையில், IC இன்ஜின் வாகனங்களை தயாரித்து வந்த அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க துவங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது எலக்ட்ரிக் இரு சக்கர வாகன பிரிவில் ஓலா, டிவிஎஸ், விரைவில் ராயல் என்பீல்டு ஆகியவை சேர உள்ளது. கோயம்புத்தூரில் நடந்த தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா 2023ல் பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொத்த எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் சுமார் 68 சதவீதம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில் தமிழ்நாடு டெக்ஸ்டைல் உற்பத்தியில் மட்டும் அல்லாமல் ஆட்டோமோட்டிவ், எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் அசத்தி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி அளவு மட்டுமே 5.37 பில்லியன் டாலராகும்.
எலக்ட்ரிக் வாகன துறையில் தமிழ்நாடு ஏற்கனேவே பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது, மார்ச் 2023 நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 6500 சார்ஜிங் ஸ்டேஷன் உள்ளது, இதில் 450 சார்ஜிங் ஸ்டேஷன் தமிழ்நாட்டில் உள்ளது. 2030க்குள் சுமார் 13 லட்சம் சார்ஜிங் ஸ்டேஷன் இந்தியாவில் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இது MSME மற்றும் தொழிலதிபர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
இதேவேளையில் ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் தனது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தொழிற்சாலை அடுத்த வருடம் முதல் செயல்பட துவங்கும் எனவும், இதுதான் இந்தியாவின் முதல் ஜிகாபேக்டரி ஆக இருக்கும் என ஓலா எலக்ட்ரிக் நிறுவன தலைவர் மற்றும் சிஇஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications