மும்பை: மும்பையை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் தோறும் 5 முதல் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக டிரெண்டானது. ஆனால் சமூக வலைத்தளங்களில் டிரெண்டான இந்த செய்தி தான் அந்த ஆட்டோ ஓட்டுனரின் வருமானத்தில் கை வைத்திருக்கிறது.
ரகுல் ரூபானி என்பவர் அண்மையில் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்றுள்ளார். அங்கே அவரது பை மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை என்றும் அவற்றை வைக்க லாக்கர் வசதி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று திகைத்து போன அவரை ஒரு ஆட்டோ ஓட்டுநர் தொடர்பு கொண்டு நான் பார்த்து கொள்கிறேன் நீங்கள் சென்று வாருங்கள், இவற்றை பாதுகாப்பாக வைத்திருந்த ஒப்படைக்க ஆயிரம் ரூபாய் கட்டணம் என கூறியுள்ளார்.

இதனை ரகுல் ரூபானி தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட அது சமூக வலைதளங்களில் டிரெண்டானது. ஆட்டோ ஓட்டுநரின் புத்திசாலித்தனத்தை பலரும் பாராட்டினர். அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே தன்னுடைய ஆட்டோவை நிறுத்தி வைத்து ஆட்டோ ஓட்டாமலேயே ஒரு நபர் சம்பாதிக்கிறார் என இவர் பிரபலமானார். அமெரிக்க தூதரகத்தில் விசா விண்ணப்பம் செய்ய வருபவர்கள் தங்களுடைய பொருட்களை இவரிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே சென்று விசா விண்ணப்பம் செய்துவிட்டு திரும்ப வந்து அதனை பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 5 முதல் 8 லட்சம் வரை வருமானம் இவருக்கு கிடைக்கிறது என பலரும் இவரின் தொழில் ஐடியாவை டிரெண்டாக்கினர். ஆனால் சமூக வலைதளங்களில் கிடைத்த புகழ் இவரது தொழிலுக்கே ஆப்பு வைத்துள்ளது. மும்பை காவல்துறையினர் அந்த ஆட்டோ ஓட்டுனர் மீது தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் அமெரிக்க தூதரத்துக்கு வெளியே உடைமைகளை பாதுகாக்கும் தொழிலில் ஈடுபட்டதாக கூறி அவரை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் இந்த ஆட்டோ ஓட்டுநருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே எந்த வாகனங்களையும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படுவது கிடையாது, ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை கொண்டு வந்து விட்டு மீண்டும் அவர்களை திரும்ப அழைத்து செல்லும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த பகுதியில் அனுமதிக்கப்படுகிறார்கள் என காவல்துறையினர் விளக்கம் தந்துள்ளனர். ஆனால் இந்த ஆட்டோ ஓட்டுநர் அனுமதியை மீறி இங்கே இந்த வேலையை செய்து வந்திருக்கிறார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications