பெங்களூரில் மட்டும் தான் இப்படி நடக்கும்.. வீட்டு வாடகையை 10000 ரூபாய் உயர்த்திய ஓனர்..!

பெங்களூர் ரியல் எஸ்டேட் துறை குறித்து சமீபத்தில் பல அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வெளியாகி வரும் வேளையில், தற்போது பலரும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக இந்த டிவிட்டர் (X) பதிவு அமைந்துள்ளது. பெங்களூர் வீட்டு வாடகை குறித்த செய்தி பெங்களூர் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் X தளத்தில் ஒரு வீட்டு ஓனர் தனது வீடு வாடகைக்கு இருப்பதாக பதிவிட்டார், இந்த பதிவு யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபலமாகி பல ஆயிரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு சின்ன பதிவு இந்தியா முழுவதும் பிரபலமாகும் அளவுக்கு இதில் என்ன நடந்தது.

பெங்களூரில் மட்டும் தான் இப்படி நடக்கும்.. வீட்டு வாடகையை 10000 ரூபாய் உயர்த்திய ஓனர்..!

ஞாயிற்றுக்கிழமை டிவிட்டரில் நித்தின் கல்ரா என்பவர் பெங்களூரில் வீட்டு வாடகை எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு இந்த இரண்டு ஸ்கிரீன்ஷாட் உதராணம், வெறும் 6 மணிநேரத்தில் ஒரு வீட்டில் வாடகை 10,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்து இரண்டு ஸ்கிரீன்ஷாட் இணைத்துள்ளார்.

இந்த ஸ்கிரீன்ஷாட்டில் எம்ஜி பரத் என்பவர் இந்திராநகர் 80 அடி சாலையில் இருக்கும் எனது 2 பெட்ரூம் வீட்டை வாடகைக்கு விட உள்ளேன். இந்த வீடு Lazy Suzyக்கு அடுத்தாக, 12வது பிரதான சாலைக்கு எதிரில் உள்ளது.

வீட்டில் இன்டிரீயர் டிசைன்கள் மிகவும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு உள்ளது, பெட்ரூம்-ல் ஹோம் தியேட்டர் செட்டப் உள்ளது மேலும் மோட்டாரில் இயங்கும் ஸ்கிரீன் உள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதி முதல் இந்த வீட்டில் குடியேறலாம். மாத வாடகை 45000 ரூபாய் என பதிவிட்டுள்ளார், இந்த பதிவு நேற்றே 3 லட்சத்திற்கும் அதிகமானார் பார்த்தனர்.

இந்திராநகர் பகுதியில் வாடகை வீட்டுக்கான டிமாண்ட் தனது வந்த மெசேஜ் வியக்கவைக்கும் அளவுக்கு இருப்பதாக உணர்ந்த எம்ஜி பரத் இந்த வீட்டில் கூடுதல் சில அம்சங்களை பட்டியலிட்டு 24 மணிநேரமும் சோலர் வாட்டர் ஹீட்டர், பவர் பேக்அப், காவிரி மற்றும் போர் தண்ணீர் இருப்பதையும் தெரிவித்த அவர் வீட்டு வாடகையை 55,000 ரூபாயாக உயர்த்தியுள்ளார்.

அதாவது வெறும் 6 மணிநேரத்தில் வீட்டு வாடகையை 10000 ரூபாய் உயர்த்தியுள்ளார் வீட்டு ஓனர். இந்த பதிவை கண்டு பலரும் கலாய்க்க துவங்கியுள்ளனர், ஆனால் எம்ஜி பரத் தான் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக வாடகை வருமானத்தை பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+