1 கோடி ரூபாய் கொடுத்தா கூட நல்ல வீடு கிடைக்கிறது இல்லையாம்.. புலம்பும் மக்கள்..!

டெல்லி: இந்தியாவில் குறிப்பாக சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெரும் நகரங்களில் நாள்தோறும் வேலை வாய்ப்பு தேடி இடம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இதன் காரணமாக இந்த நகரங்களில் எல்லாம் ஒரு வீடு வாங்குவது அல்லது சொந்தமாக ஒரு நிலம் வாங்குவது என்பது எட்டாக்கனியாக மாறி வருகிறது. அதற்கு உதாரணமாக எக்ஸ் தளத்தில் ஒருவர் பகிர்ந்து உள்ள செய்தி தற்போது மிகப்பெரிய விவாதமாக மாறி உள்ளது.

1 கோடி ரூபாய் கொடுத்தா கூட நல்ல வீடு கிடைக்கிறது இல்லையாம்.. புலம்பும் மக்கள்..!

ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் கூட இந்த நகரங்களில் எல்லாம் நாம் நினைத்தபடி ஒரு நிலத்தை கூட வாங்க முடியாது என ஒருவர் புலம்பலை வெளியிட சமூக வலைத்தளவாசிகள் அதனை ட்ரெண்டாக்கி அதன் மீது விவாதங்களை நடத்தி வருகின்றனர்.

ஐஐடி மும்பை மும்பையில் படிப்பை முடித்த கல்பித் வீர்வால், ஒரு நிலத்தை வாங்குவதற்காக தான் எவ்வளவு சவால்களை சந்தித்தேன் என்பது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இப்போதெல்லாம் ஒரு கோடிக்கு நிகராக 5 கோடியை பார்க்கின்றனர், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் ஒரு நல்ல இடத்தை வாங்குவதோ அல்லது ஒரு வீட்டினை வாங்குவதோ என்பது எட்டாக்கனியாக மாறிவிட்டது. ஒரு கோடி ரூபாய்க்கு நீங்கள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் இடம் வாங்கவே முடியாது ,இங்க எல்லாம் ஒரு கோடி என்பது தற்போது ஐந்து கோடியாக மாறிவிட்டது என பதிவிட்டுள்ளார்.

1 கோடி ரூபாய் கொடுத்தா கூட நல்ல வீடு கிடைக்கிறது இல்லையாம்.. புலம்பும் மக்கள்..!

அவரது இந்த பதிவு இது போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கும் சமூக வலைதள வாசிகளிடையே வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் இந்த பதிவை மறு பதிவிட்டுள்ளனர். மேலும் நகரப்பகுதி ரியல் எஸ்டேட் துறை குறித்து இது மிகப்பெரிய விவாதத்தையும் எழுப்பியுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கோன் பனேகா குரோர்பதி என்ற ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டது அப்பொழுது ஒரு கோடி இருந்தால் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் இப்போது ஒரு கோடி இருந்தால் ஒரு நகரப் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கூட நம்மால் வாங்க முடியாது என ஒரு பயனாளர் தன்னுடைய கவலையை தெரிவித்துள்ளார்.

அதே வேலையில் மற்றொரு நபர் பெருநகரங்களில் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்குவது என்பது இனி முடியாத காரியம் நாம் இரண்டாம் நிலை நகரங்களுக்கு சென்று விட வேண்டியது தான் என கூறியுள்ளார். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தையும் புலம்பலையும் எக்ஸ் தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Story written by : Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+