சாகசம் என்றால் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் இருக்காது, அவ்வப்போது மக்கள் திடீரென்று தங்களது அன்றாட வாழ்க்கையில் ஏதாவது ஒரு சாகச செயலைச் செய்து அசத்துவார்கள். அதுபோல டெல்லியில் ஒருவர் போக்குவரத்து நிறைந்த சாலையில் தனது மினி புல்லட்டில் ஓட்டி பொதுமக்களையும் ஆச்சரியப்படுத்தி விட்டார்.
பொதுவாக புல்லட் என்றாலே பெரியதாகவும், அதிகப்படியான சத்தம் எழுப்ப கூடியதாகவும் தான் இருக்கும். இதுதான் புல்லட்-ன் அடையாளம், இதனாலேயே பலருக்கும் பழைய புல்லட் மீது அதிக ஆர்வமும், விருப்பமும் இருக்கும். பழைய புல்லட்டில் வரும் சத்தமே ஒரு இசை போல இருக்கும், அதை தாண்டி புல்லட்-ஐ பைக் என சொன்னால் கூட பலருக்கு பிடிக்காது. காரணம் பைக் வேறு புல்லட் வேறு. புல்லட் என்பது வெறும் வாகனம் இல்லை அது ஓரு மெமோஷன்.

ராம்மி ரைடர் என்ற நெட்டிசன் இந்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த மாதத் தொடக்கத்தில் வெளியான விடியோ இதுவரை 3,87,000 லைக்குகளையும் .4.6 மில்லியன் வியூக்களையும் பெற்று அசத்தியுள்ளது.
இந்த விடியோவில், பேபி பிங்க் நிறத்தில் ஒரு மினி சைஸ் புல்லட்டில் ராம்மி ரைடர் ஓட்டி வருவதை பார்த்து ஊரே வியந்து பார்க்கிறது. இந்த புல்லட் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது, இந்தியாவிலேயே ஒரேயொரு பைக் இது என்று அந்த பைக்கில் ஸ்டிக்கர் வேறு ஒட்டி வைத்துள்ளார்.
விடியோவைப் பார்த்துவிட்டு இந்த பைக்கை விற்பீர்களா அல்லது இதேபோன்று பைக்கை தயாரித்து தருவீர்களா என்று கேட்டு ஏராளமான மக்கள் ராம்மி ரைடரை மொய்க்கத் தொடங்கிவிட்டனர். பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருக்கும் இந்த பைக்கை பார்பி புல்லட் என்று அழைக்கின்றேன். இதில் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் வாய்ப்பு குறைவு என்கிறார் ரைடர்.
ராம்மி ரைடர் இந்த பார்பி புல்லட்-ஐ தூக்கிஎறியப்பட்ட ஹோண்டா ஆக்டிவாவை மாற்றி வடிவமைத்து உள்ளார். குழந்தைகள் சைக்கிள் சைசில் இருக்கும் இந்த பைக் பலரையும் கவர்ந்துள்ளது. சிறுவர்கள் ஓட்டும் டாய் சைக்கிள் மாதிரி இருந்தாலும் பார்ப்பவர்களை மனம் கவர்கிறது. இதேபோல சிறுவர்களுக்காக சீக்கிரமே மினி பைக்குகளை தயாரிக்கப்போவதாக ராம்மி ரைடர் கூறியுள்ளார்.
மனிதர் நைஸாக காசு பார்ப்பதில் கில்லாடி போல, இவரது ஐடியாவுக்கு இப்போதே டிமாண்டு அதிகரித்து விட்டது. எனக்கு உனக்கு என்று ஆயிரக்கணக்கானவர்கள் தங்களுக்கு இந்த மாதிரி மினி புல்லட்டை தயாரித்துத் தருமாறு கேட்டு பதிவுகளை இட்டு வருகின்றனர்.
மினி புல்லட்டை பார்த்து டெல்லி சாலையில் உண்மையிலேயே வாகன ஓட்டிகள் முதலில் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அதன் அழகு வடிவமைப்பில் ஆச்சரியப்பட்டு மினி புல்லட்டுக்கு வழிவிட்டு வாழ்த்தினர்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications