தமிழ்நாட்டின் ஐடி சேவை துறையின் மையமாக உருவெடுத்து வரும் கோவை நகரில், அலுவலக இடங்களுக்கான தேவை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு அடுத்தபடியாக, டெக் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை கோயம்புத்தூரில் விரிவாக்கம் செய்ய விரும்பும் முக்கியமான இடமாக மாறி வருகிறது.
இதனால் அலுவலக ரியல் எஸ்டேட் துறை தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் கோவையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான டன்னி ஷெல்டர்ஸ், சரவணம்பட்டி பகுதியில் புதிய ஐடி பார்க்கை அமைக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்த புதிய ஐடி பார்க் சுமார் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் வேளையில், 12 மாடிகள் கொண்ட இரட்டைக் கட்டிடங்களைக் கொண்டிருக்கும். அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த ஐடி பார்க், கோவையில் நிலவும் அலுவலக இடங்களுக்கான அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இப்புதிய டன்னி ஷெல்டர்ஸ் ஐடி பார்க் எப்படி இருக்கும் என்பது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கோவை மாநகரத்தை சரவணம்பட்டி பகுதி, சிறந்த போக்குவரத்து வசதிகளைக் கொண்டதாக இருப்பதால், இந்த ஐடி பார்க் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இதன் மூலம், கோவையின் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் மற்றும் நகரின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும்.
டன்னி ஷெல்டர்ஸின் இந்த திட்டம் மட்டுமின்றி, கோவையில் ஏற்கனவே பல ஐடி பார்க்குகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. Tanny Shelters நிறுவனம் சரவணம்பட்டி-யில் ஐடி பார்க் கட்டி வரும் வேளையில் 2வது திட்டத்தை அறிவித்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் பிரம்மாண்டமாக சுமார் 7,00,000 சதுரடி ஐடி பார்க் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கோயம்புத்தூரில் அதித்யா டெக் பார்க், இந்தியா லேண்ட், கேபிஆர், எஸ்விபி, எல்காட், எல் அண்ட் டி, wynfra cybercity, கேசிடி, ரத்தினம் டெக் சோன், டைடல் நியோ ராக்கிப்பாளயம் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் கோவையில் தங்கள் முதலீடுகளை அதிகரித்து அலுவலக இடத்தை உருவாக்கி வருகின்றன.
தமிழ்நாடு அரசு அமைப்பான எல்காட் சமீபத்தில் கோயம்புத்தூரில் கட்டப்பட்டு, முதல்வர் திறந்து வைக்கப்பட்ட எல்காட் IT டவரில் பிரான்சின் முன்னணி IT நிறுவனமான கேப்ஜெமினி, சுமார் 1.4 லட்சம் சதுர அடி இடத்தை குத்தகைக்கு எடுத்து தனது மெகா கோயம்புத்தூர் அலுவலகத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications