இந்திய மக்களின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படும் வேளையில், பல இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனல், பரிசு பொருட்கள், இனிப்பு என பலவற்றையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஊழியர்களுக்கு முந்திரி, பாதாம் மற்றும் திராட்சை ஆகியவற்றைத் தீபாவளி பரிசாக கொடுத்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் தீபாவளி பண்டிகையின் போது சிறப்பு பரிசை வழங்குவது முக்கிய வழக்கமாகக் கொண்டு உள்ளனர், இந்திய நிறுவனங்களைக் காட்டிலும் இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் பரிசுகள் மூலம் ஊழியர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவதை ஒவ்வொரு வருடமும் தவறாமல் செய்கிறது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமில் பணிபுரியும் ஒரு சாஃப்ட்வேர் டெவலப்பர் தனது இன்ஸ்டாகிராமில் இந்த கிஃப்ட் பாக்ஸ்-ஐ பிரிக்கும் வீடியோவை பதிவிட்டதில் இருந்து பெரிய அளவில் டிரெண்டாகியது.
இந்த கிஃப்ட் பாக்ஸ் உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மனைவி நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா, ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமல், அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் குடும்பத்தின் நான்கு இளம் பேரக்குழந்தைகள் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு வாழத்து அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
"ஜியோ நிறுவனத்தின் தீபாவளி பரிசு @client company" என்று இன்ஸ்டாகிராம் இந்த சாப்ட்வேர் டெவலப்பர் பதவிட்ட வீடியோ சுமார் 19 லட்ச பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications