திருப்பதியுடன் சேர்த்து தனியார்மயமாகும் திருச்சி விமான நிலையம்: அது என்ன Bundling Model?

விமான போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் மத்திய அரசு அதன் ஒரு பகுதியாக திருச்சி விமான நிலையத்தை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது. இதில் Bundling Model என்ற முறையில் திருப்பதி விமான நிலையத்துடன் திருச்சியையும் இணைக்க திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு விமான நிலையங்களை இணைத்து தனியார் மயமாக்கும் இந்த முடிவை, தரவு சார்ந்த பகுப்பாய்வுகளின் அடிப்படையில் எடுத்துள்ளது. பயணிகளின் வருகை, நிலப்பரப்பு, வணிக ரீதியான சாத்தியக்கூறுகள் , நிதிநிலை செயல்பாடு மற்றும் விமான நிலையத்தின் பிரத்யேக வசதிகள் போன்ற பல்வேறு காரணிகள் கவனத்தில் கொள்ளப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதியுடன் சேர்த்து தனியார்மயமாகும் திருச்சி விமான நிலையம்: அது என்ன Bundling Model?

முதலில் Bundling Model அடிப்படையில் இரண்டு விமான நிலையங்களும் நிர்வாக ரீதியாக இணைப்படும். அதிக அளவில் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்கள் மட்டுமே தனியாக லாபகரமாக இயங்க கூடியவையாக உள்ளன. எனவே, குறைவான பயணிகள் போக்குவரத்து உள்ள விமான நிலையங்களின் ஒட்டுமொத்த லாபத்தன்மையை உயர்த்தும் நோக்கத்தோடு, அவற்றை அதிக பயணிகள் செல்லும் விமான நிலையங்களுடன் இணைப்பதே இந்த வியூகத்தின் முக்கிய நோக்கமாகும்.

திருப்பதி விமான நிலையத்தை திருச்சிராப்பள்ளி விமான நிலையத்துடன் இணைப்பதன் மூலம் புதிய முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், செயல்பாட்டுத் திறன் மேம்படும் என்றும், வணிக வளர்ச்சி துரிதப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விமான போக்குவரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அதற்கேற்ப தேவையான மேம்பாட்டு பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Also Read

இதே போன்றதொரு Bundling மாடலின் கீழ், ராஜமுந்திரி மற்றும் கடப்பா விமான நிலையங்களையும் தனியார் துறைக்கு வழங்குவதற்கான திட்டம், பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 11 விமான நிலையங்களை இந்த முறையில் இணைத்து மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசு தனியார் பங்களிப்பு என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

முதலில் திருப்பதியுடன் இணைந்து திருச்சி விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பம் செய்யலாம் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பங்கேற்று ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள் இரண்டு விமான நிலையங்களையும் மேலாண்மை செய்யும்.

Recommended For You

இந்த நிறுவனங்கள் விமான நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவது சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்தை அதிகப்படுத்தி வருவாயை பெருக்குவது போன்ற பணிகளில் ஈடுபடும். இதன் மூலம் பெரிய விமான நிலையங்களுடன் சேர்த்து சிறிய விமான நிலையங்களும் வளர்ச்சி அடையும் வாய்ப்பு கிடைக்கும்.

விமான சேவைகளும், பயணிகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அடுத்தடுத்து பல்வேறு விமான நிலையங்கள் தனியாருக்கு கைமாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி விமான நிலைய மேம்பாடு விமானங்களின் வருகையை அதிகரிக்கும். இது ஒட்டுமொத்தமாக திருச்சியின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+