தமிழ்நாட்டின் முக்கிய நகரமாக இருக்கும் திருச்சியில் கடந்த 10 வருடத்தில் பல ஐடி நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், MSME நிறுவனங்கள் பல தரப்பினர் முதலீடு செய்வது மட்டும் அல்லாமல் திருச்சி மாவட்டத்தைச் சுற்றிப் பல பகுதிகள் மாநிலத்தின் முக்கிய தொழிற்கூடமாக மாறி வருகிறது.
இந்த நிலையில் திருச்சியின் வளர்ச்சியை ஈடுகொடுக்கும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் புதிய டெர்மினல்-ஐ பிரதமர் மோடி இந்த வருடம் ஜனவரி மாதம் திறந்து வைத்தார். ஆனால் பல்வேறு பணிகள் முடிவுபெறாத நிலையில் மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் ஜூன் 11 ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் புதிய டெர்மினல் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் திருச்சி மக்கள் மட்டும் அல்லாமல் பல தொழிலதிபர்கள் பாராட்டினர். திருச்சி விமான நிலையத்தின் இந்த புதிய டெர்மினல் மத்திய தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய டெர்மினல் திறக்கப்பட்ட மகிழ்ச்சியான செய்தியைத் தொழிலதிபர் ஆனந்த மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த மஹிந்திரா தனது டிவீட்டில் "திருச்சி விமான நிலையத்தின் புதிய டெர்மினல் அருமையாக உள்ளது. குறிப்பாக, இதன் கட்டமைப்பில் உள்ளூர் கலாச்சாரம் சிறப்பாக பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்தியா முழுவதும் புதிய மற்றும் அதிநவீன விமான நிலையங்களை உருவாக்குவதில் இளம் பருவ சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு அவர்கள் புதிய சாதனை படைப்பார் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மாடிகளைக் கொண்ட 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய டெர்மினல், ரூ.1,112 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 44.5 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது இந்த டெர்மினல். பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு என தனித்தனி மாடிகளைக் கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய டெர்மினலில் பயணிகளின் வசதிக்காக 104 இமிகிரேஷன் கவுண்ட்டர்கள் மற்றும் 5 பேக்கேஜ் கன்வேயர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில், "புதிதாக கட்டப்பட்ட, அதிநவீன வசதிகளைக் கொண்ட திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய டெர்மினலில் இருந்து புறப்படும் முதல் சர்வதேச விமான நிறுவனம் நாங்கள் என்பதில் பெருமைப்படுகிறோம்.

கடந்த 44 ஆண்டுகளாக, கொழும்பு வழியாக திருச்சியை உலக நாடுகளுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் பிணைப்பு மேலும் வலுப்பெறும் இந்த தருணத்தில் நாங்கள் இணைந்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications