திருச்சி நிறுவனத்தின் புரட்சி.. இனி பைக் ஓட்ட பெட்ரோல் தேவையில்லை..!!

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேஆர் ஃப்யூவல்ஸ் (KR Fuels) நிறுவனம், BS4 ரக இருசக்கர வாகனங்களில் ஆட்டோ LPG பயன்படுத்தி வாகனத்தை இயக்கும் ரெட்ரோபிட்மென்ட் பொருத்தும் முறைக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் அனைத்து இரு சக்கர வாகனங்களும் பெட்ரோல் அல்லது மின்சாரத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி மட்டுமே இயங்கக் கூடியதாக உள்ளது. இந்த நிலையில் LPG எரிவாயு மூலம் இயங்கும் புரட்சிகரமான மாற்றத்தைத் திருச்சி கேஆர் ஃப்யூவல்ஸ் கொண்டு வர உள்ளது.

திருச்சி நிறுவனத்தின் புரட்சி.. இனி பைக் ஓட்ட பெட்ரோல் தேவையில்லை..!!

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவிலேயே முதன் முதலாக இத்தகைய சான்றிதழைப் பெற்ற நிறுவனமாக கேஆர் ஃப்யூவல்ஸ் திகழ்கிறது.

இந்தியாவில் நிலையான போக்குவரத்து முறையில் ஆட்டோ எல்பிஜி மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதை கார்களுக்கும், ஆட்டோக்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக இரு சக்கர வாகனங்களுக்குப் பயன்படும் ரெட்ரோபிட்மென்ட் கிட் பொருத்தும் உரிமையைப் பெற்றுள்ளது.

திருச்சி கேஆர் ஃப்யூவல்ஸ் (KR Fuels) நிறுவனம் தயாரித்துள்ள இயற்கை எரிபொருள் கான்வெர்ஷன் கிட்களை நாடு முழுவதும் கொண்டு செல்ல தயாராக உள்ளது.

ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோபோடிக் கரங்கள் (robotic arms) மூலம், திருச்சியில் உள்ள காவிரி ஃப்யூவல்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் இந்த LPG கான்வெர்ஷன் கிட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த ரெட்ரோபிட்மென்ட் கிட்களில் 5 லிட்டர் கொள்ளளவுடைய எரிபொருள் டேங்க், ஸ்கூட்டர்களுக்கான எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் (ECU), வயரிங் அமைப்புகள் மற்றும் இன்ஜெக்டர்கள் ஆகியவை அடங்கும்.

இந்த கிட்களை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு முன்பு தேவையான அனைத்து அரசாங்க அனுமதிகளையும் சான்றிதழ்களையும் பெறும் பணிகளை தற்போது KR Fuels நிறுவனம் செய்து வருகிறது.

"இந்திய ஆட்டோ LPG கூட்டமைப்பின் (Indian Auto LPG Coalition) இயக்குநர் ஜெனரல் சுயஷ் குப்தா கூறுகையில், "BS4 இருசக்கர வாகனங்களில் ஆட்டோ LPG அமைப்பைப் பொருத்துவதற்கான ஒப்புதலை கேஆர் ஃப்யூவல்ஸ் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பாரம்பரிய எரிபொருட்களை காட்டிலும் குறைந்த மாசு, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுத் தேர்வாக ஆட்டோ LPG இருப்பதைக் காட்டுவதோடு, இந்தியா முழுவதும் வாகனங்களின் உமிழ்வைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகவும் இது உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 2.5 கோடிக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இருப்பதால், இந்த ரெட்ரோபிட்மென்ட் கிட் தமிழ்நாட்டின் காற்றின் தரத்தைப் பெரிய அளவில் உயர்த்தும்.

மேலும், இந்த கிட்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தினார். இதன் மூலம், நுகர்வோருக்கு இந்தத் தொழில்நுட்பம் எளிதில் கிடைப்பதையும் மேக் இன் இந்தியா திட்டத்தையும் ஆதரிக்க முடியும் என கூறினார் சுயஷ் குப்தா.

காவிரி ஃப்யூவல்ஸ் நிறுவனம் ஏற்கனவே ரெட்ரோபிட்மென்ட் கிட்களின் உற்பத்தியைத் தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக 8000 எரிபொருள் டேங்குகள் விநியோகத்திற்கு தயாராக உள்ளன. தமிழ்நாடு முழுவதும் 73 ஆட்டோ LPG நிலையங்கள் மற்றும் 7 கான்வெர்ஷன் மையங்களை இந்த நிறுவனம் இயக்கி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+