இந்திய பொருளாதாரம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையை நோக்கி சென்று வரும் வேளையில் நாட்டின் முன்னணி நிறுவனங்களும் இதே பாதையில் நகர துவங்கியுள்ளது. பல புரட்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு இதற்கு முன்னோடியாக இருந்துள்ளது என்றால் மிகையில்லை.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பல வருடங்களாக உற்பத்தி, ஏற்றுமதி, MSME ஆகியவை முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தற்போது மாநிலத்தின் உற்பத்தி முணையத்தை சென்னை மட்டுமே சார்ந்து இருக்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாக உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் புதிய முதலீடு, புதிய உற்பத்தி தளங்களை கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளது தமிழ்நாடு அரசு. தற்போது மாநிலத்தில் பல மாவட்டத்தில் சிப்காட் தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வருவது மட்டும் அல்லாமல் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு வந்த திட்டங்களும் மீட்டு எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய தமிழ்நாட்டில் அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் உள்ளது. இப்பகுதியில் பல முன்னணி மற்றும் புகழ்பெற்ற கல்லூரிகள் மட்டும் அல்லாமல் பல தொழிற்சாலைகளும் உள்ளது. இப்பகுதி பொருளாதாரம், வேலைவாய்ப்பை மேம்படுத்த ஏற்கனவே சேலம் மற்றும் திருச்சி-யில் டைடல் பார்க் அறிவிக்கப்பட்டு உள்ள வேளையில் அடுத்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்திற்கு அருகே உள்ள மணப்பாறையில் உள்ள சிப்காட் பகுதியில், பெரும் பகுதி நிலத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டதில் இருந்து டாடா குழுமத்தின் பல திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறது.
இந்தியாவில் எந்தொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அதிகப்படியான படித்த இளைஞர்களும், திறமையான இளைஞர்களும் இருக்கும் வேளையில் இதை பயன்படுத்திக்கொள்ள நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளது. இதேவேளையில் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு தங்களுடைய வர்த்தகத்தை கொண்டு செல்லும் டிரெண்ட் அதிகமாகியுள்ளது.
அந்த வகையில் டாடா குழுமம் சுமார் 283 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியுள்ளது, இந்த நிலத்தில் எலக்ட்ரிக் வாகனம் உற்பத்தி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தொழிற்சாலை, செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அல்லது எலக்ட்ரானிகஸ் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை என எதுவேண்டுமானாலும் வர வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications